முதலாவது நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது அனைவருக்கும் PCR பரிசோதனை..

ஜே.எப்.காமிலா பேகம்-

திர்வரும் தேர்தலின் பின்னர் ஒன்று கூடவுள்ள முதலாவது நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது, அனைத்து உறுப்பினர்களும் உள்நுழைவதற்கு முன்னர் பெரும்பாலும் PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுகின்ற அனைத்து உறுப்பினர்களும், நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் முதலாவது கூட்டத் தொடரில் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஒரு மீட்டர் இடைவெளியைப் பேணி அனைத்து உறுப்பினர்களையும் ஆசன அடிப்படையில் அமர வைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக முதலாது கூட்டத் தொடரின் போது, 225 உறுப்பினர்களும் சத்தியப்பிரமாணம் செய்தல், சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகர் உள்ளிட்டவர்களை தெரிவு செய்யும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் குறித்த நிகழ்வுகளுக்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தனிப்பட்ட ரீதியில் PCR பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டி வரும் எனவும், அவ்வாறு இல்லாத பட்சத்தில் அனைவரும் நாடாளுமன்றத்தில PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும், நாடாளுமன்ற பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -