அமெரிக்காவில் ஜோர்ஜ் பிளோய்டைப் போல மற்றுமொருவர் மீது பொலிஸார் கொடூரத் தாக்குதல் நடத்திய காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜோர்ஜின் கொலைக்கு நீதிகோரி, ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இதனிடையே நிவ்யோர்க்கில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தினிடையே, 75 வயது வயோதிப நபரை தடியொன்றின் உதவியில் கீழே தள்ளிய இரண்டு பொலிஸ் அதிகாரிகள் அவர்மீது சரமாரி தாக்குதலை நடத்தினர்.
இந்த தாக்குதலை அப்படியே காணொளி பதிவுசெய்த ஊடகவியலாளர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட மேலும் பரபரப்பு ஏற்பட்டது.
குறித்த பொலிஸ் அதிகாரிகள் தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள அதேவேளை, விசாரணைகளையும் நிவ்யோர்க் பொலிஸ் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
VIDEO: https://streamable