நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா ஹட்டன் பிரதான சோட்கட் வீதியில் ரதல்ல கார்லிபெக் பகுதியில் பார ஊர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியதில் அதில் காயமடைந்த இருவர் கடும் காயங்களுக்கு உள்ளாகி நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (06) திகதி 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பொலன்நறுவையிலிருந்து நுவரெலியாவுக்கு அரிசி கொண்டு சென்று மீண்டும் பொகவந்தலாவை பகுதியை நோக்கி சென்று கொண்டிருக்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தினால் பார ஊர்த் பாரிய சேதத்திற்குள்ளாகியுள்ளன.இவ்விபத்து பாரஊர்தியில் ஏற்பட்ட கோளாறு காணமாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்; மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.