பொலிசாரால் ஒலுவில் வாலிபர் கைது: மன்றில் 14 நாள் விளக்கமறியல்!
காரைதீவு நிருபர் சகா-கடந்த சனியன்றிரவு காணாமல்போனதாக முறையிடப்பட்ட திராய்க்கேணி தமிழ்மாணவி ஆறு நாட்களின் பின்னர் நேற்றிரவு (16) அக்கரைப்பற்று பொலிசினூடான மீட்கப்பட்டு வைத்தியப்பரிசோதனை செய்யும் நிமித்தம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது பாட்டியுடன் பேத்தியான அம் மாணவி வைத்தியசாலையில் தற்சமயம் மருத்துவசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அவரைக் கொண்டுசென்றார் என்ற சந்தேகத்தின்பேரில் ஒலுவிலைச் சேர்ந்த 18 வயது வாலிபர் ஒருவர் அக்கரைப்பற்றுப் பொலிசாரால் கைது செய்யபட்டிருந்தார்.
அவரை நேற்று (17) வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று நீதிமன்றில் பொலிசார் ஆஜர்செய்தனர். மாணவியின் மருத்துவஅறிக்கை வரும்வரை அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் எம்.ஹம்ஸா உத்தரவிட்டார்.
மாணவிக்கு என்ன நடந்ததென்றறியாமல் கடந்த ஆறு தினங்களாக திராய்க்கேணிக் கிராமம் அச்சத்துடனும் வேதனையுடனுமிருந்தது. குடும்பத்தினரும் அழுதுபுலம்பியபடி இருந்தனர். காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கே.ஜெயசிறில் அடிக்கடி அங்கு சென்று நிலைமையை அறிந்தவண்ணமிருந்தார்.ஆறுதலும் கூறினார்.
அக்கரைப்பற்று பொலிஸ்பொறுப்பதிகாரி விஜேதுங்க நெறிப்படுத்தலில் குற்றத்தடுப்பு பொலிஸ் உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.அசீம் எடுத்த துரித நடவடிக்கையின்பேரில் இவர் கைதுசெய்யப்பட்டு இன்று விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனைப்பிரிவுக்குட்பட்ட திராய்க்கேணி தமிழ்க்கிராமத்தைச் சேர்ந்த 14 வயது மாணவி சிவபாலன் யசுதா(வயது14) திராய்க்கேணி அ.த.க.பாடசாலையில் தரம் 8இல் கல்வி கற்றுவருபவர் என்றும் கடந்த 11ஆம் திகதி இரவு 10 மணியளவில் காணாமல்போயுள்ளார் அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை எனவும் அவரது பாட்டி மாமாங்கம் நாகம்மா என்பவர் முறைப்பாட்டை தெரிவித்துள்ளார். மாணவிக்கு தாய் தந்தை இல்லாதகாரணத்தினால் பாட்டிதான் அவரை வளர்த்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாட்டி அக்கரைப்பற்று பொலிசிலும் கிராமசேவை உத்தியோகத்தருக்கும் முறையிட்டிருந்தார்.பின்பு காரைரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கி.ஜெயசிறிலிடம் சென்று அவருடாக கல்முனைப்பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுக்காரியாலயத்திலும் அட்டாளைச்சேனை பிரதேசசெயலகததிலும் முறைப்பாடுகளை தெரிவித்திருந்தார்.
அதற்கமைய அக்கரைப்பற்றுப்பொலிசார் மேலதிக விசாரணைகளை நடாத்திவருகின்றனர்.