ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
அமெரிக்காவில் ஒலியை விட 17 மடங்கு வேகமாக செல்லக்கூடிய ஹைப்பர் சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த March மாத இறுதியில் பசுபிக் பெருங்கடல் பகுதியில் இந்த ஏவுகணை சோதனையை நடந்தது.
கடந்த May மாதத்திலிருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட ட்ரம்ப் ஒலியை விட 17 மடங்கு வேகமாக செல்லும் ஹைப்பர் சோனிக் ஏவுகணை குறித்து தொடர்ந்து கருத்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ளது.
அடுத்த 4 வருடங்களில் பசுபிக் பெருங்கடலில் குறைந்தது 40 ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ஏவி சோதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த மாதம் 30ம் திகதி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த நவீனமயமாக்கலுக்கான பாதுகாப்பு , ஆராய்ச்சி மற்றும் பொறியியல் பீட பணிப்பாளர் மார்க் லூயிஸ், 2025ம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட ஹைப்பர் சோனிக் முன்மாதிரி ஆயுதங்களின் சோதனை முடிவடையுமென்றும், அதன் பிறகு அந்த ஆயுதங்கள் ராணுவத்தில் சேர்க்கப்படுமென்றும் முன்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.