தேசிய காங்கிரஸ் திகாமடுல்ல மாவட்ட 3ம் இலக்க வேட்பாளரும் சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருமான ஏ.எல்.எம்.சலீம் அவர்களை ஆதரித்து சாய்ந்தமருது 18ம் வட்டார கருத்தரங்கு இன்று நடைபெற்றது.
சாஸ்க்கோ நிறுவன உரிமையாளர் கே.எம்.சதாத் அவர்களின் ஏற்பாட்டில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் என்.எம்.றிஸ்மிர் தலைமையில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இக்கருத்தரங்கு நடந்தேறியது.
இதன்போது, சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவுச் சங்க இயக்குனர் சபை தலைவரும் ஓய்வுபெற்ற நிருவாக உத்தியோகத்தருமான எம்.எம்.உதுமாலெப்பை அவர்களும் அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.