ஆலமரம் வீழ்ந்த தொடர் குடியிருப்பில் ஆபத்தான நிலையில் வாழும் 18 குடும்பங்கள்.


ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மிகவும் அருகாமையில் உள்ள கிளஙகன் தோட்டத்தில் ஆலமரத்தின் கிளை ஒன்று முறிந்து வீழ்ந்த தொடர் குடியிருப்பு சேதமடைந்த நிலையில் கடந்த நான்கு வருட காலமாக மிகவும் ஆபத்தான நிலையில் வாழ்ந்து வருவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
2016 .04 18 ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக இந்த தோட்டத்தில் 100 வருடத்திற்கு மேல் பழமை வாய்ந்த பாரிய ஆலமரத்தின் கிளை ஒன்று முறிந்து வீழ்ந்தன. இதனால் 24 வீடுகளைக் கொண்ட குறித்த தொடர் குடியிருப்பில் இரண்டு வீடுகளும் ஒரு ஆலயமும் முற்றாகச் சேதமடைந்தன. இந்நிலையில் ஒரு குடும்பம் அத்தோட்டத்தில் உள்ள சிறுவர் பாராமறிப்பு நிலையத்திலும் ஏனைய குடும்பங்கள் தற்காலிக வீடுகளிலும் ஏனைய 18 குடும்பங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள தொடர் குடியிருப்பிலும் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
சுமார் 100 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த தொடர் குடியிருப்பு பல இடங்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இன்னும் சில இடங்களில் அத்திவாரம் சேதமடைந்த நிலையில் எப்போது வேண்டுமானால் இடிந்து வீழும் நிலையிலேயே இவர்கள் வாழ்ந்து வருவதாக இவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த ஒவ்வொரு வீடுகளிலும் உள்ள எட்டடி காம்பாராக்குள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு ஐந்து பேர் வாழ்கின்றனர்.இதில் க.பொ.த.சாதாரண தரம் க.பொ.த உயர்தரம் படிக்கும் மாணவர்களும் இருக்கின்றனர்.இடவசதிகள் இன்றி கல்வியினை தொடர முடியாத நிலையிலேயே பல மாணவர்கள் இருப்பதாக இங்கிருக்கின்றவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதே வேளை வீடு சேதமடைந்த போது அந்த குடியிருப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு சிறுவர் பராமறிப்பு நிலையத்தில் குடியமர்த்திய 05 அங்கத்தவர்களைச் சேர்ந்த குடும்பத்தை எவ்வத ஏற்பாடுகளையும் செய்து கொடுக்காது அங்கிருந்து வெளியேறுமாறு கோரி தோட்ட நிர்வாகம் அக்குடும்பத் தலைவியின் வேலையினை நிறுத்தியுள்ளதாகவும் குறித்த சிறுவர் பராமறிப்பு நிலையத்திற்கு வழங்கப்பட்ட மின்சாரமும் தோட்ட நிர்வாகத்தினால் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தங்களுடைய பிள்ளைகள் கற்றலை தொடர் முடியாது அவதிப் படுவதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த தொடர் குடியிருப்பு சேதமடைந்த போது அம்பகமுவ இடர் முகாமைத்துவ நிலையத்தினால் நிவாரணங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்ட போதிலும்.அதன் பின் அவர்கள் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று, இவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.
தேர்தல் காலத்தில் மாத்திரம் வந்து வாக்கு கேட்கும் மலையக அரசியல் தலைவர்கள் தாங்கள் படும் துன்பங்களை அவதானித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காதிருப்பதேன் ஏன்? என இவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
எது எவ்வாறான போதிலும் தொடர்ந்து இவர்களுக்கு பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து தங்களைத் தொடர்ந்தும் ஏமாற்ற வேண்டாம் என்றும் இந்த வீடுகள் இடிந்து வீழ்ந்த மக்கள் மடிவதற்கு முன் பாதுகாப்பான வீடுகளை அமைத்துத் தருமாறு இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -