தற்போது நாட்டில் காணப்படும் கொரனா வைரஸ் அச்சுறுத்தலை கருத்தில்கொண்டு காலத்தின் தேவைக்கேற்ப மாணவர்களுக்கு கொரனா தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்குகள் மற்றும் பாடசாலைகளுக்கான கைகழுவும் நீர் இணைப்பு தொட்டிகள் வழங்கும் நிகழ்வுகளை முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி IRFAD அமைப்புடன் இணைந்து மேற்கொண்டுவருகின்றது.
கல்முனை கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கான மூன்று கட்ட கருத்தரங்குகள் இதுவரை இடம்பெற்றுள்ளன.
முதலாவது நிகழ்வு கல்முனை இஸ்லாமபாத் மகாவித்தியாலயத்தில் இர்பாட் அமைப்பின் தலைவர் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமில் தலைமையில் இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபரும் பெண்கள் அமைப்பின் இணைப்பாளருமான ஏ.ஜி.எம். றிஸாத்தின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது. இதில் இஸ்லாமபாத் மகாவித்தியாலயம் மற்றும் கல்முனை இராமகிருஸ்ண மிஷன் வித்தியாலய மாண தலைவர்கள் பொறுப்பாசிரியர்கள் பங்குபற்றியிருந்தனர்.
இக்கருத்தரங்கில் பாடசாலை சூழலில் மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டிய கொரனா தடுப்பு விழிப்புணர்வு செய்முறைகளின் ஊடாக வழங்கப்பட்டன.
இதில் வளவாளர்களாக சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.எல்.. பாறுக் சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ. மஜீட் பிரதேச சுற்றாடல் உத்தியோகத்தர் திருமதி வி.செவ்வேல் குமாரன் ஆகியோரும் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் யூ.எல்.ஹபீலா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது பங்குபற்றிய பாடசாலைகளுக்கு சுற்றுச்சூழல் கழிவுகளை தரம் பிரித்து போடுவதற்கான குப்பைத் தொட்டிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இரண்டாம் மூன்றாம் கட்ட நிகழ்வுகள் இஸ்லாமபாத் மகாவித்தியாலய அதிபரும் ஆறுசுயுகு அமைப்பின் இணைப்பாளருமான ஏ.ஜீ.எம். றிஸாத் தலைமையில் நடைபெற்றது .இதில் முதல் நாள் நிகழ்வில் பாண்டிருப்பு இந்து மகா வித்தியாலய பாடசாலையின் மாணவத் தலைவர்களும் மருதமுனை அல்- ஹம்றா வித்தியாலயத்தின் மாணவத் தலைவர்களும் பங்குபற்றியிரந்தனர் இரண்டாம் நாள் கருத்தரங்கில் கல்முனை அல் ஹம்றா வித்தியாலயம் இஸ்லாமபாத் மகாவித்தியாலய மாணவ தலைவர்கள் பொறுப்பாசிரியர்கள் பங்குபற்றியிருந்தனர்.
இக்கருத்தரங்குகளில் வளவாளர்களாக கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.றிஸ்வின் சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ. மஜீட் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர் .