கடந்த ஜூன் 16ஆம் திகதி முதல் நேற்று வரையிலான காலப்பகுதியில், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட 20 ஆயிரத்து 371 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த காலப்பகுதிக்குள், நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
அத்துடன், இதன்போது, ஹெரோயின், கஞ்சா மற்றும் ஐஸ் ஆகிய 714 கிலோவுக்கும் அதிகமான, போதைப் பொருட்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த சுற்றிவளைப்பின்போது, ஆயிரத்து தொள்ளாயிரத்து 62 சட்டவிரோத ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 184 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 17 ஆயிரத்து தொள்ளாயிரத்து 13 பேரும், வேறு குற்றங்கள் தொடர்பில் 33 ஆயிரத்து 269 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.