ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2/3 பெரும்பான்மை பெற்று ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளதாக பொதுஜன பெரமுன திருகோணமலை மாவட்ட வேற்பாளர் கபில அத்துக்கோரல தெரிவித்தார்.



எப்.முபாரக்-
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2/3 பெரும்பான்மை பெற்று ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளதாக பொதுஜன பெரமுன திருகோணமலை மாவட்ட வேற்பாளர் கபில அத்துக்கோரல தெரிவித்தார்.
கந்தளாயில் நேற்றிரவு(20) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாறுகையில்:
ஐனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவிற்கு மக்கள் ஆணையை வழங்கி குறுகிய காலத்தில் பொதுஜன கட்சி ஜனாதிபதியாக்கியுள்ளது.அதேபோன்று உள்ளுராட்சி மன்ற தேர்தல்களிலும் கூடுதலான ஆதிக்கத்தினை பொது ஜனபெரமுன கட்சி பெற்றுள்ளது.
அதேபோன்று தான் இம்முறை நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தல்களிலும் நூற்றி முப்பதிற்கும் மேற்பட்ட ஆசனங்களை கைப்பற்றி ஆட்சியமைப்போம்.
திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதிக்கமும் செல்வாக்கும் வெகுவாக குறைந்துள்ளது,இனி ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிப்பதில் எந்த பயனுமில்லை என்று மக்கள் உணர்ந்து விட்டார்கள் அதனால் தான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி முன்னிலையில் நிற்கின்றது,
இம்முறை சேருவில புராதன பூமி வளம்பெற வேண்டுமானால் சேருவில தொகுதியிலிருந்து என்னை பாராளுமன்றத்திற்கு நீங்கள் அனுப்ப வேண்டும்,மாவட்டத்தின் பல்வேறு பிரச்சினைகளை இனங்கண்டுள்ளேன் அதனை நிறைவேற்ற சந்தமொன்றினை எனக்குத் தாருங்கள்.இன்னும் நீண்ட காலத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதிக்கம் தான் நீடிக்கப்போகின்றது.
மாற்றுக் கட்சிகளுக்கு வாக்களிப்பதை விட்டு விட்டு ஆட்சியில் உள்ள கட்சிக்கு வாக்களியுங்கள், வெளியூர் வேற்பாளர்களுக்கு வாக்களிப்பதை தவிர்த்து பிரதேசத்தில் இருப்பவர்களுக்கு வாக்களியுங்கள் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -