கொவிட்-19 வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக கட்டம் கட்டமாக ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த வகையில் முதற்கட்டமாக இன்று திங்கற்கிழமை ஐந்தாம் தரம், 11, 13ஆம் தரமாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகின. சகல பாடசாலைகளும் அரசாங்கத்தினதும், சுகாதார அமைச்சினதும் அறிவுறுத்தல்களுகளை கடைப்பிடித்து கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன் பிரகாரம் இன்று கொழும்பு மருதானை ஸாஹிராக் கல்லூரிக்கு வருகை தந்த மாணவர்களை அதிபர் றிஸ்வி மரைக்கார் உள்ளிட்ட சகல ஆசிரியர்களும், மாணவத் தலைவர்களும் ஒன்றினைந்து சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக மாணவர்கள் கைகழுவி, உடல் வெப்பநிலை அளவிடப்பட்டு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சுகாதார நடைமுறைகளை பின்பற்றும் வகையிலான விஷேட அறிவுறுத்தல் அட்டைகள் வழங்கியும், பேனைகள் வழங்கியும் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.