ஹொங்கொங் அரசியல் விவகாரத்தில் சீனாவின் தலையீட்டை எதிர்த்தும் அமுல்படுத்தப்பட்டுள்ள் புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராகவும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஹொங்கொங் நகரத்தில் தன்னாட்சி அதிகாரத்தை குறைக்கும் வகையில், புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா அறிமுகப்படுத்தியுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் ஹொங்கொங்கின் சுதந்திரத்திற்கு அழைப்பு விடும் வகையிலான வாசகங்கள் பொறிக்கப்பட்ட கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 300 இற்கும் அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்களை சீன பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதேவேளை, ஹொங்கொங்கில் புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தினை செயற்படுத்துவதற்கு சீன அரசாங்கம் நேற்றைய தினம் அனுமதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.