file photo |
ஜே.எப்.காமிலா பேகம்-
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான ரிஸாட் பதியூதீனின் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குருநாகல் தெலியாகொட பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட சிலர் இவ்வாறு வேட்பாளரது வாகனங்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் மூன்று வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டிருக்கின்றன.
சம்பவத்தை அடுத்து கூட்டத்திற்கு வருகைதந்த முன்னாள் அமைச்சர் ரிஸாட் பதியூதீன் அங்கிருந்து பாதுகாப்பாக சென்றுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம். |
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம். |