பொலன்னறுவை கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஆலோசகர் ஒருவர் கலந்து கொண்ட மரணாச்சடங்கில் பங்கேற்ற 4 அரசியல்வாதிகளுக்கு தனிமைப்படுதல் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த 4 பேரும் வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
எனினும் அவர்களில் ஒருவர் மட்டுமே தனிமைப்படுதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கும் பொது சுகாதார பரிசோதாகர்களின் சங்கத்தலைவர் உப்புல் ரோகண, ஏனைய 3 பேரும் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் கூறியுள்ளார்.
இதன் காரணமாக குறித்த 3 அரசியல்வாதிகளினால் சமூகத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.