தேர்தல் சட்டவிதி மீறல்கள் தொடர்பில் இதுவரை 5 ஆயிரத்து 236 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு ஆயிரத்து 11 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு மத்திய நிலையத்திற்கு 4 ஆயிரத்து 225 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே கடந்த 25ஆம் திகதி பிற்பகல் 4 மணிமுதல் நேற்றுமுன்தினம் பிற்பகல் 4 மணிவரையான காலப்பகுதிக்குள் 163 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றுள் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 18 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் 145 முறைப்பாடுகள் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு மத்திய நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது