கொழும்பில் A.L.M.உவைஸ் ஹாஜியார் தலைமையில் பொதுக்கூட்டம்.


சில்மியா யூசுப்-

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் A.L.M.உவைஸ் ஹாஜியார் தலைமையில் பொதுக்கூட்டம் ஒன்று 2020.07.05 ம் திகதி கொழும்பு மருதானையில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் நடை பெற்றது.

இந் நிகழ்வில் கொழும்பு மாவட்டத்தின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர்கள், வியாபாரிகள், வாக்காளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இதில் உரையாட்டிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் சம்மேளனத்தின் அமைப்பாளர் உவைஸ் ஹாஜியார்

" எமக்கான ஒரு பலமிக்க அரசாங்கம் தேவை. அதற்கு சிறுபான்மையினராக இருக்கும் நாம் தான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு அதி கூடிய வாக்குகளை பெற்று கொடுத்து முஸ்லிம்களின் நலனுக்காக நாம் செயற்பட வேண்டும்.

எமது முஸ்லிம்களின் ஒரு சிறந்த ஆளுமைமிக்க தலைவராக , ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாம் அவரை ஆதரிக்க வேண்டும்.
எனவே எமது சமுதாயத்தில் நலனுக்காக பாடுபடும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அவர்கள் தேசிய பட்டியலில் இருப்பதையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் சம்மேளனத்தின் தலைவராக இருப்பதையும் நினைத்து நாம் மகிழ்ச்சியடைகின்றோம்"
மேலும் அவர் தொடர்ந்தும் உரையாட்டுகையில், முஸ்லிம்கள் ஒன்றிணைந்து பெரும்பான்மை கட்சிகளோடு சென்றால் தான் தங்களது தேவைகளையும், அபிலாசைகளையும் நிறைவேற்ற முடியும் அத்தோடு நாடும் ஒரு அமைதியான நாடாக அமையும் என தன் உரையில் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -