ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது மத்திய செயற் குழுவின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல் ஒன்று கட்சியின் தவிசாளர் சகோ.ஏ.எல்.அப்துல் மஜீட் இல்லத்தில்,அமைப்பாளர் எம்.ஐ.எம்.பிர்தௌஸ் தலைமையில் நேற்று (01/07/2020) மஃரிப் தொழுகைபின் பின் இடம் பெற்றது.
இக்கலந்துரையாடலில்,எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலை மையமாகக்
கொண்டு கருத்துப் பரிமாறல்கள் இடம் பெற்று பல முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப் பட்டு கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் கவனத்திற்கு
கொண்டு செல்வதென தீர்மானிக்கப் பட்டது.
இக் கலந்துரையாடலில் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளர் .ஏ.எம்.ஜெமீல், கட்சியின் உயர்பீட உறுப்பினரும் சாய்ந்தமருது மத்திய செயற் குழுவின் செயலாளருமான .ஏ.ஜலால்டீன்,முன்னாள் மாநகரசபை உறுப்பினர்களும் கட்சியின் மூத்த உறுப்பினர்களுமான ஏ.ஏ.வஸீர்,ஏ.நிஸார்டீன்,ஏ.சி.
சமால்டீன் மற்றும் மூத்த உறுப்பினர்களான எம்.எம்.எம்.றபீக்(உதவிச் செயலாளர்)எஸ்.எச்.எம்.பிர்தௌஸ்,எம்.எச்.எம்.முபாறக் மற்றும் பல முன்னணி போராளிகளும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -