கல்முனைப் பிரதேசத்திற்கான சமூக தகவல் நிலையமொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது
முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட சர்வ மத சமய சம்மேளனத்தினால் இந்நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது
சர்வ மத சமய சம்மேளத்தின் செயலாளர் சிரேஸ்ட ஊடகவியலாளர் வீ.ரி.சகாதேவராசா தலைமையில் இதற்கான ஊடக சந்திப்பொன்று இன்று(26) அம்பாறை மாவட்டம் மருதமுனை பகுதியில் இடம்பெற்றது
இந்நிகழ்வில் பெண்களுக்கான வன்முறை தொடர்பில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் மருதமுனை நிலைய முகாமையாளர் கே.நிஷாந்தினி, சம கால பிரச்சினை தொடர்பில் முன்னணியின் இணைப்பாளர் யூ.எல்.ஹபீலா, சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் கல்முனை அஸ் ஸுஹாறா வித்தியாலய அதிபர் எம்.எச் .எஸ்.ஆர். மஜீதியா, தகவல் சட்ட மூல அறிவாக்கம் பற்றி விரிவுரையாளர் அன்ஸார் மௌலானா, அனர்த்த விழிப்புணர்வு தொடர்பில் ஓய்வு நிலை அதிபர் சந்திரலிங்கம், எதிர்கால சயற்பாடுகள் குறித்து இஸ்லாமாபாத் அதிபர் ஏ.ஜீ.எம்.றிஸாத் ஆகியோரும் அறிக்கை சமர்ப்பித்து உரையாற்றினர்