கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் இன்று (06) திறக்கப்பட்டு கல்வி செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
பாடசாலை ஆரம்பித்த இன்றய முதல் நாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு அட்டாளைச்சேனை கோணாவத்தையில் அமைந்திருக்கும் அந்நூர் மகாவித்தியாலயத்தில் காத்திரமான செயற்பாடுகள் மிகவும் திறமையாக அமைக்கப்பட்டிருந்தன.
பாடசாலை அதிபர் ஏ.முகம்மட் அஸ்மி, பாடசாலை கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் பொறுப்பில் உள்ள ஆசிரியர் ஜே.பஸ்மிர் இவர்களுடன் ஆசிரியர் ஆசிரியைகள் மற்றும் பெற்றார் சிலர் இணைந்து நவீன முறையில் மாணவர்கள் கை கழுவும் ஏற்பாடு செய்திருப்பதுடன் நோய்வாய்ப்படும் ஆண், பெண் மாணவ மாணவியர்களுக்கு பிரத்தியேகமாக அறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -