நிந்தவூரில் 18.07.2020 அன்று வீட்டுக்கு வீடு சென்று எதிர்வரும்
பாராளுமன்றத் தேர்தல் - 2020 க்கான பிரச்சாரப்பணிகளை ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் போராளிகள் சகிதம் இளம் போராளிகள் உட்பட நடைபவணியாகமுன்னெடுத்தனர்.
இந்நிகழ்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் அவர்களால்
நிந்தவூருக்காக சுமார் 64 கோடி ரூபாய்களுக்கு செய்யப்பட்ட அபிவிருத்திகளை
விளக்கும் புத்தகமும் வீட்டுக்கு வீடாக கையளிக்கப்பட்டது.
மிகுந்த ஆர்வத்துடனும் ஆரவாரத்துடனும் இடம்பெற்ற இப் பவணியினைம் முன்னாள்
இராஜாங்க அமைச்சர் கெளரவ பைசால் காசிம் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
குறித்த நிகழ்வானது ஆசிப் பைசால் அவர்களினால் வழிநடாத்தப்பட்டதுடன்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர்கள் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி
ஆரிப்சம்சுதீன் அவர்களின் உற்சாகமான பங்கேற்றலுடன் வெகு சிறப்பாக
இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.