திருகோணமலையில் பதினேழு பவுன் தங்ககளை கொள்ளையிட்ட இருவரும், திருடிய தங்க நகைகளை வாங்கிய ஒருவருமாக மூவரை இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று(15) உத்தரவிட்டார்.
திருகோணமலை சமன்புர,நாச்சிக்குடா மற்றும் என் சி வீதி பகுதியைச் சேர்ந்த 37,26 மற்றும் 38 வயதுடைய மூவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் திருகோணமலை நகரிலுள்ள நகைக் கடையொன்றினை உடைத்து பதினேழு பவுன் தங்க நகைகளை திருடி நகை வியாபாரியொருவருக்கு விற்பனை செய்த வேளையிலே பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்களை கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தியோக உத்தவிட்டார்.