பொதுத் தேர்தலின் பின்னர் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போது சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிள்ளையான் இதுகுறித்து ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு தெரிவித்திருக்கின்றார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கில் பிள்ளையான் தற்சமயம் சிறை வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றால் நிச்சயம் தனக்கு அமைச்சுப் பதவியொன்றை வழங்க அரசாங்கம் உறுதியளித்திருப்பதாக கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment