சாய்ந்தமருதில் ஒன்றுபட்ட முஸ்லிம் காங்கிரஸார்!!! (படங்கள்)


சாய்ந்தமருதில், கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஸ்தம்பித நிலையில் இருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாடுகள், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பிரதி அமைப்பாளருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் அவர்களது தலைமையில் 2020.07.10 ஆம் திகதி மீண்டும் புதிய உத்வேகத்துடன் முடிக்கிவிடப்பட்டது.
அம்பாறை மாவட்ட முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.எம் டில்சாத் அவர்களது நெறிப்படுத்தலில் இடம்பெற்ற குறித்த ஒன்றுகூடல் நிகழ்வுக்கு கல்முனை மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளருமான எம்.ஐ பிர்தௌஸ், முன்னாள் பிரதி முதல்வர் ஏ.ஏ.பஷீர், காரைதீவு பிரதேசசபை உறுப்பினர் எம்.எச்.இஸ்மாயில் உள்ளிட்ட அதிதிகளும் பெரும் திரளான கட்சி ஆதரவாளர்களும் கூடியிருந்தனர்.
எதிர்வரும் பொதுத்தேர்தலை இலக்காக வைத்தும் முஸ்லிம் காங்கிரஸின் இருப்பை சாய்ந்தமருதில் மீண்டும் கட்டியெழுப்புவது தொடர்பிலும் கடந்த பொதுத்தேர்தலில் மக்களை ஒன்று திரட்டியதுபோல் இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க தேர்தலிலும் மக்களை ஒன்றுதிரட்டி அந்த மக்களுக்கு உண்மையை தெளிவுபடுத்தி இலக்கை அடைவது குறித்தும், எதிர்வரும் 2020.07.13 ஆம் திகதி திங்கட்கிழமை சாய்ந்தமருதில் பொதுத்தேர்தலுக்கான மாவட்ட ஒருங்கிணைப்புக் காரியாலயம் மற்றும் சாய்ந்தமருது மாளிகைக்காடு தேர்தல் காரியாலயங்களை முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களது பிரசன்னத்துடன் திறந்து வைத்து இயங்குவது தொடர்பிலும் இங்கு கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.
இலங்கையில் சிறுபான்மையினரின் இருப்பை, குறிப்பாக முஸ்லிம்களின் இருப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ் எதிர்கொள்வது, பிரதேசத்தில் முடுக்கிவிடப்பட்டுள்ள பிரதேசவாதம் என்ற தீயைக் கட்டுப்படுத்தி மக்களை இயல்புவாழ்க்கைக்குக் கொண்டுவருவது கிடப்பில் போடப்பட்டுள்ள சாய்ந்தமருது மக்களின் உள்ளுராட்சிசபை என்ற தாகத்தை தீர்த்து வைப்பதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்வது என்பன போன்ற பல்வேறு தீர்மானங்களும் இங்கு எடுக்கப்பட்டன.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -