ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சண்முகம் திருச்செல்வம் தெரிவிப்பு.
ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-மலையக மக்களின் உண்மையான பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்று இன்று ஐக்கிய தேசிய கட்சியினையே குறைகூறி வருகின்றனர். ஆனால் உ;ண்மை அதுவல்ல மலையக மக்களின் பிச்சினைகள் தீர்க்க மக்கள் பிரதிநிதிகள் கட்சி; உயர் மட்டத்துடன் பேசி தீர்வினை பெற்றுக்கொடுத்திருக்க வேண்டும். அவர்கள் இவ்வாறு எவ்வித நடவடிக்கையும் எடுக்காது கட்சிகளை குறைகூறுவதன் மூலம் எவ்வித பயனுமில்லை. என ஐக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் சண்முகம் திருச்செல்வம் தெரிவித்தார்.
இன்று (11) கொட்டகலையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
என்னை மக்கள் தேர்;ந்தெடுத்தால் நான் தான் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும். அரசாங்கத்தையோ கட்சியினை குற்றம் சாட்டக்கூடாது எனக்கு நிர்வாக திறமையும் புத்திரசிகாமணிக்கு அரசியல் அனுபவமும் இருப்பதனால் நாங்கள் புத்திஜீவிகளுடன் இணைந்து 10 ஆண்டு திட்டம் ஒன்றினை வகுத்து மலையக இளைஞர்களின் தொழில் பிரச்சினைகள் மலையக மக்களின் அடிப்படை வாழ்வியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்போம். அத்தோடு யார் என்ன கூறினாலும் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சிதான் வெற்றிப்பெரும். அதில் மாற்றமில்லை ஏனென்றால் மக்கள் இன்று ஐக்கிய தேசிய கட்சியினை நன்கு புரிந்து கொண்டுள்ளார்கள். அதனால் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள் இன்று எம்முடன் இணைந்து வருகிறார்கள்.
ஆகவே இன்று மலையக இளைஞர்களின் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய விசேட வேளைத்திட்டம் ஒன்றினை நான் முன்னெடுப்பேன.; நான் சௌமிய மூர்த்தி தொண்டமான் முதல் ஆறுமுகன் தொண்டமான் வரை அரசியல் தொழிற்சங்க மற்றும் நிர்வாக அனுபவங்களினால் பட்டை தீட்டப்பட்டவன்; எனக்கு இவர்களின் பிரச்சினைகளை இலவாக தீர்க்க முடியுமென அவர் மேலும் தெரிவித்தார். இதே நேரம் நுவரெலியா மாவட்டத்தில் சுயேட்சை குழுவில் போட்டியிடும் சிலர் இன்று; ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆரவளிக்கப்போவதாக அதன் உறுப்பினர்கள் சிலர் இவர்களுடன் இணைந்து கொண்டனர்.