காரைதீவு பிரதேச சபை தோடம்பழம் உறுப்பினர் ஏ.ஆர்.எம்.பஸ்மீர் முஸ்லிம் காங்கிரஸில் இணைவு

சர்ஜுன் லாபீர், நூருள் ஹுதா உமர்-
காரைதீவு பிரதேச சபை தோடம்பழ சுயேச்சை குழு உறுப்பினர் ஏ.ஆர்.எம் பஸ்மீர் இன்று(16) உத்தியோகபூர்வமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்தார்.இது தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு மாளிகைக்காடு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சரருமான எச்.எம்.எம் ஹரீஸின் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டதுடன் திகாமடுல்ல மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து தேர்தல் கேட்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றிக்காகவும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸின் வெற்றிக்காகவும் தொடர்ந்து பணியாற்றுவதாகவும் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்பஸ்மீர் குறிப்பிட்டு இருந்தார்.

மாளிக்கைக்காடு மேற்கு வட்டாரத்தில் தோடம்பழ சுயேச்சை குழு சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர் தோடம்பழ சுயேச்சை குழு நிர்வாக உறுப்பினர்கள் தொடர்ச்சியான புறக்கணிப்பு மற்றும் தோடம்பழ சுயேச்சை குழு உறுப்பினர்கள் அண்மையில் தேசிய காங்கிரஸ் கட்சியில் இணையும் போது கூட தன்னை அழைக்கவில்லை என்பதோடு இன்னும் பல்வேறுபட்ட புறக்கணிப்புக்கள் மற்றும் செயற்பாடுகள் காரணமாகவே நான் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்தாக குறிப்பிட்டு இருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -