கல்முனை மு.காவின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபித்த ஹரீஸ் : மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய கல்முனை பிரச்சார கூட்டம்.


க்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் திகாமடுல்லவில் போட்டியிடும் ஸ்ரீ்லங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதிநிதிகளை ஆதகரித்து முன்னாள் இராஜாங்க அமைச்சரும் திகாமடுல்ல மாவட்ட தொலைபேசி சின்ன வேட்பாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் ஏற்பாட்டில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் கல்முனை கடற்கரை வீதீயில் உள்ள திடலில் நேற்று (14) மாலை நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், முன்னாள் நகர திட்டமிடல், நீர்வளங்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டு சமகால அரசியல் நடவடிக்கைகள் சம்மந்தமாகவும் தேர்தல் விடயங்கள் சம்மந்தமாகவும் மக்களுக்கு தெளிவுபடுத்தினார்.

இந் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான ஏ.எல்.எம்.நஸீர், பொத்துவில் பிரதேச சபை முன்னாள் தவிசாளரும் வேட்பாளாருமான எம்.எஸ்.எம் வாசீத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வேட்பாளருமான எம்.ஐ.எம் மன்சூர், கட்சியின் பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர்,கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல் அமானுல்லாஹ், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீல், முன்னாள் மாகாண அமைச்சர் எம். எஸ் உதுமாலெப்பை, கல்முனை மாநகர சபை, நாவிதன்வெளி, காரைதீவு, அட்டாளைச்சேனை பிரதேச சபை போன்ற சபைகளின் உறுப்பினர்கள், அடங்கலாக அக்கட்சியின் முக்கியஸ்தகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -