பாராளுமன்றப் பொதுத் தேர்தல் -2020 பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இவ்வேளை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் நேற்று (09.07.2020) மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு இடங்களில் இடம்பெற்றன.
கல்குடா, காத்தான்குடி மற்றும் ஏறாவூரில் மாத்திரம் இரண்டு இடங்களில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் முதலாம் இலக்க வேட்பாளர் அலி ஸாஹீர் மெளலானாவின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் உரையாற்றும்போது தன்னுடன் அடுத்த பாராளுமன்றில் அலி ஸாஹீர் மெளலானா கட்டாயம் இருக்க வேண்டியவர் என்று குறிப்பிட்டதுடன் அலிஸாஹீர் மெளலானா கடமையில் சரியாக இருப்பவர் மாத்திரமல்லாமல் தலைமைக்கு சரியாகக் கட்டு பட்டு நடப்பதில் முன்னிலையானவர் ஒழிவு மறைவு ஏதும் இல்லாமல் நடந்து கொள்ளும் கண்ணியமானவர் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய அவர்:
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசில் இணைந்த பலர் பாரிய நன்மைகளைப் பெற்றுள்ளனர். இன்னும் சிலர் கட்சிக்கு பிரயோசனத்தைக் கொடுத்துள்ளனர். அதிலும் சிலரின் வருகையால் கட்சி பாரிய அலங்காரமாக அமைந்தது. அதிலே அலி ஸாஹிர் மெளலானா முதன்மையானவர் அவரின் வருகை பலம்பொருந்திய ஒன்றாக அமைந்துள்ளது.
அதுபோல் தலைமை எதனைக் கூறினாலும் அதனை சரியாக எந்த முறன்பாடும் இல்லாமல் செய்து முடிப்பதில் மெளலானாக்கு நிகர் வேறு யாரும் இருக்க முடியாது.
அவரின் கடந்த இராஜாங்க அமைச்சுக் காலத்தில் தனக்குக் கிடைத்த பதவியை வைத்து பெயர் சொல்லும் நிலைக்கு திறமாகச் செய்தவர். அவருடைய சேவைகள் மட்டக்களப்பு மாவட்டம் மாத்திரமன்றி முழு இலங்கைக்கும் பேசுபொருளாக இருக்கின்றன.
எனவே நடைபெறவிருக்கும் இத்தேர்தலில் அலி ஸாஹீர் மெளலானா வெற்றி பெற்று தலைமையுடன் பாராளுமன்றில் இருக்க வேண்டிய காலத்தின் கட்டாயமான ஒருவரே இந்த அலி ஸாஹீர் மெளலானா என்பதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன் குறித்த உரையின் சுருக்கத்தில் மெளலானா வெற்றிபெறவேண்டும் வெற்றிக்காக கட்சியின் தலைவரும் முழுமூச்சாய் ஈடுபடுவார் என்பதுடன் நேற்றைய கூட்டத்தில் அதிகமான சனக்கூட்டம் மெளலானாவின் பிரச்சாரக்கூட்டத்தில் காணக்கிடைத்தமையும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.