திருகோணமலை அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான இருபதாயிரம் கிலோவுக்கும் மேற்பட்ட மின்சாரக் கம்பிகளை அனுமதிப் பத்திரமின்றி லொறியொன்றில் ஏற்றிக் கொண்டு சென்ற ஒருவரை இன்று(12) அதிகாலை கைது செய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிரியந்தலாவ,தென்ன பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் அனுமதிப்பத்திரமின்றி திருகோணமலை பகுதியிலிருந்து பிலியந்தலாவ பகுதிக்குச் லொறியொன்றில் ஏற்றிச் கொண்டு சென்ற போதே அக்போபுர பொலிஸ் பொறுப்பதிகாரியின் கண்கானிப்பின் கீழ் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.