பிரபாகரன் வீட்டையும் த.தே.கூட்டமைப்பையும் ஆதரிக்குமாறே கூறினார்! அம்பாறை தமிழ்மக்களின் அரசியல்இருப்பு வரவரமோசமாகிக்கொண்டுவருகிறது.


ஜனநாயக போராளிகள் கட்சியின் கொள்கைபரப்புச்செயலர் சாந்தன் கூறுகிறார்.
காரைதீவு நிருபர் சகா-
மிழ்த்தேசியத்தின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பையும் வீட்டுச்சின்னத்தினையும் மட்டுமே ஆதரிக்குமாறு அன்று களத்தில்நின்ற போராளிகளாகிய எங்களிடம் கூறினார்.
இவ்வாறு ஜனநாயக போராளிகள் கட்சியின் கொள்கை பரப்புச்செயலாளர் பி. கோணேஸ்வரன் (சாந்தன்) ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினார்.

இச்சந்திப்பு நேற்றுமாலை காரைதீவிலுள்ள தமிழரசுக்கட்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.அவருடன் உபதலைவர் நகுலேஸ்வரன் உள்ளிட்ட போராளிகள் கலந்தகொண்டிருந்தனர்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது:
நாம் 30வருட போராட்ட களத்தில் நின்றவர்கள். 45ஆயிரம் போராளிகள் களத்தில் களமாடி தமிழ்மக்களுக்காய் தனதுயிரை ஈகம் செய்தவர்கள். அவர்களை மனதில் நினைத்தால் வீட்டைத்தவிர வேறெதற்கும் தமிழ்மக்கள் வாக்களிக்கமாட்டார்கள்.
தலைவர் ஆயுதுமுனையிலும் அரசியல்முனையிலும் இருபெரும் யுத்தங்களை நடாத்திவந்தவர்.அரசியலில் த.தே.கூட்டமைப்பை உருவாக்கி தமிழ்பேசும் மக்களுக்காக ஒருமித்துபபயணிக்க மக்களையும் போராளிகளையும் நம்பி ஒப்படைத்தார்.
இநநிலையில் மட்டக்களப்பிலிருந்து இங்குவந்துபார்க்கின்றபோது அம்பாறை மாவட்ட தமிழ்மக்களின் அரசியல் இருப்பு என்பது மிகமோசமான நிலையிலிருப்பதை உணரமுடிகிறது. இது ஆபத்தானது. பிரதிநிதித்துவம் பறிகோகக்கூடிய அவலநிலையுள்ளது. தமிழ்மக்கள் மிகவும் இக்கட்டான கட்டத்திலிருப்பதாக உணர்கிறோம்.
எனவே வீட்டைத்தவிர வேறு யாருக்கும் ஒருவாக்கையாவது அளித்தால் அது வரலாற்றுத்தவறாகிவிடும். என்பதற்கப்பால்; மிகமோசமான விளைவுகளை பின்னடைவுகளை அம்பாறைத்தமிழர்கள் சந்திக்கவேண்டிவரும். வாழ்வு இருள்மயமாகிவிடும்.
தமிழ்தேசியத்தைச் சிதறடிக்க அரசின் முகவர்களாக ஊதுகுழலாக கருணா போன்றவர்கள் இறக்கப்பட்டுள்ளனர். யார் எதைச்சொன்னாலும் வீட்டுக்குவாக்களிக்கவேண்டியது தமிழ்மக்களின் தார்மீககடமை.
கருணா 10ஆயிரம் வாக்குகளைப்பிரித்தால் தமிழ்ப்பிரதிநிதித்துவம் இழக்கப்படுவதோடு அதாவுல்லாவின் வெற்றிக்கு வழிவகுக்கும்.

நாம்முஸ்லிம் மக்களை ஒருநாளும் விரோதியாகப்பார்க்கவில்லை. முஸ்லிம் மக்களையும் இணைத்தே போராட்டம் ஆரம்பமானது.42முஸ்லிம் போராளிகள் வீரச்சாவு அடைந்திருக்கிறார்கள்.நிலத்தால் மொழியால் ஒன்றுபட்டவர்கள் இணைந்தே பயணிக்கவேண்டும் என விரும்புகிறோம்.

த.தே.கூட்டமைப்பை கருணாதான் ஆரம்பித்ததாக சொல்கிறாரே ! அதுதொடர்பாக உங்கள் பதில் என்ன என்று கேட்டதற்கு:
தலைவர் த.தே.கூட்டமைப்பை உருவாக்கும்போது கருணாவும் இருந்தார். அதற்காக அவர்தான் ஆரம்பித்தார் என்று கூறமுடியாது.

ஒரு கட்டத்தில் சம்பந்தரும் தலைவர் பிரபாகரன் இக்கட்சியை ஆரம்பிக்கவில்லை? என்று கூறியிருந்தாரே அதுதொடர்பாக என்னசொல்கிறீர்கள்?
சம்பந்தர் போராளியல்ல. இராஜதந்திரரீதியாக ஒரு தலைவர் செயற்படவேண்டியதேவையிருக்கிறது. சர்வதேசத்திடம் சென்று பிரபாகரன்தான் கட்சியை ஆரம்பித்தார் என்று கூறமுடியாது. அந்த இராஜதந்திரநகர்வே தவிர வேறொன்றுமில்லை. எந்தசக்திக்கும் விலைபோகாத சோரம்போகாத தலைவரென்றால் அதுசம்பந்தராகத்தானிருக்கமுடியும்.
கடந்தகாலத்தில் இங்குள்ள பிரதிநிதிகள் வெறும் வாக்குறுதிகள் விஞ்ஞாபனங்கள் வெளியிட்டார்களே தவிர மக்களுக்கு இக்கட்சி எதுவும் செய்யவில்லையென்று சொல்லப்படுகிறதே அது பற்றிச்சொல்லுங்கள்?

பலதமிழ்க்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்று ஆக 80-90தமிழ்அரசியல்கைதிகளே சிறையில் உள்ளனர். பல ஏக்கர் நிலப்பரப்புகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
நாம் கேட்டது அம்பாறை மாவட்ட அரசியலை..
அப்படி இருந்திருக்கலாம்.100வீதம் அனைத்தையும் செய்யமுடியாது. நாம் தற்போது கரம்கோர்த்திருக்கிறோம். இனி நாம் த.தே.கூட்டமைப்பின் செயற்பாடுகளை கவனிப்போம். மக்களுக்கான சேவைகள் சீராக சென்றடைகின்றனவா என்பதை அவதானித்து உள்ளிருந்து சுட்டிக்காட்டி பரிகாரம்தேடுவோம்.
நாம் ஒரு கட்சியாயிருந்தும் இம்முறை தேர்தலில் இறங்கவில்லை. ஆனால் எதிர்வரும் மாகாணசபைத்தேர்தலில் களமிறங்குவோம். என்றார்.
அங்கு காரைதீவு தவிசாளர் கே.ஜெயசிறிலும் விளக்கமளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -