மலையகத்தின் எதிர்காலம் என்னவோ அதற்கே நாங்கள் முக்கியத்தும் அளிப்போம்.


நுவரெலியா மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாயர் எம் உதயகுமார் தெரிவிப்பு.
ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
லையகத்தில் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்கள் தனி ஒருவராக நின்று எவ்வாறு வேலை செய்தாரோ அவ்வாறே நான் அவரோடு நின்று தோழோடு தோல் கொடுத்து மலையகத்தின் எதிர்காலம் என்னவோ அதற்கு முக்கியத்துவம் அளிப்போம் என நுவரெலியா மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப தலைவருமான எம். உதயகுமார் தெரிவித்தார்.
கொட்டகலை பத்தனை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் எமது தலைவர் பழனி திகாம்பரம் அவர்கள் வெற்றி பெற்று மலையகத்தின் வீடமைப்புத்திட்டத்தினையும் வீதி அபிவிருத்தி திட்டத்தினையும் முன்னெடுத்து செல்வார். நான் அவரோடு இணைந்து மலையக மாணவர்களின் கல்வி அபிவிருத்தி,விளையாட்டு துறை விருத்தி வேலை வாய்ப்பு சுயதொழில் போன்றன, வற்றை கட்டாம் முன்னெடுப்பேன் நீங்கள் எங்களுடன் இருக்கும் வரை உங்களுக்கு என்னென்ன தேவை அதனை அறிந்து நான் நிச்சயம் செய்து கொடுப்பேன். உங்கள் வாழ்க்கை என் கையில் இன்று தேர்தல் என்பதால் பலர் வருவார்கள் பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள். அதை செய்து தருகிறோம் இதை செய்து தருகிறோம் என்றெல்லாம் பேசுவார்கள்.அவற்றை கேட்டு மக்கள் ஏமாற கூடாது. நாங்கள் கடந்த காலங்களில் மலையகத்தில் பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளோம் வீடுகளை அமைத்து கொடுத்துள்ளோம். காபட் வீதிகளை தோட்டங்களுக்கு கொண்டு வந்துள்ளோம்.பிரதேச சபைகளை அபிவிருத்தி செய்துள்ளோம். விளையாட்டுத்துறையினை விருத்தி செய்துள்ளோம்.கல்விக்காக உதவி செய்துள்ளோம்,குடிநீர் வசதிகளை செய்து கொடுத்துள்ளோம்.நாலரை ஆண்டு காலப்பகுதியில் என்னென்ன செய்ய முடியுமா அவற்றை எல்லாம் செய்து காட்டிவிட்டு வந்துதான் வாக்கு கேட்கிறோம். வெறுமனே ஒன்றுமே செய்யமால் வாக்குறுதிகளை மாத்திரம் பெற்றுக்கொடுத்து விட்டு வாக்குகளை கேட்க வில்லை. இதனை உணர்ந்து மக்களுக்கு யார் உண்மையாக சேவை செய்கிறார்களோ, அவர்களை தெரிவு செய்து பாராளுமன்றாம் அனுப்புவதன் மூலம் சமூகத்தில் ஒரு மாற்றம் ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -