வடமேல் மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் ஐந்து வருடத் திட்டம், வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் மற்றும் வடமேல் மாகாண பிரதான செயலாளர் P.B.M. சிறிசேன ஆகியோரினால் இலங்கை ஜனநாயக குடியரசின் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இதன்போது, கொவிட்- 19 நிதியத்திற்காகச் சேகரிக்கப்பட்ட வடமேல் மாகாண ஊழியர்களின் ஒருநாள் சம்பளமான 22.6 மில்லயன் ரூபாய் பெறுமதியான காசோலையும் ஆளுநர் அவர்களினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
நிகவெரடியில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமேல் மாகாண கல்விப் பணிப்பாளர் கே.எஸ்.கே. ஜயதிலக, வடமேல் மாகாண பிரதான திட்டமிடல் உதவிச் செயலாளர் கே.ஏ. நந்தசேன, உதவி திட்டமிடல் பணிப்பாளர் சிசிர தர்மசேன ஆகியோர் கலந்துகொண்டனர்.