பொதுஜன பெரமுன அதிக ஆசனங்களை பெறும்.



தலவாக்கலை பி.கேதீஸ்-
பொதுத தேர்தலில் ஆளும் பொதுஜன பெரமுன கூடுதலான ஆசனங்களைப் பெற்று பலம் வாய்ந்த அரசாங்கத்தை அமைக்கும். மலையக மக்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் விட்ட தவறினை இந்தத் தேர்தலிலும் விடாமல் பொதுஜன முன்னணிக்கு வாக்களித்து அரசாங்கத்தின் பங்காளியாக மாற வேண்டும். அப்போதுதான் எமது பிரச்சினைகளையும், தேவைகளையும் நிவர்த்தி செய்து கொள்ள முடியும் எனவே நுவரெலியா மாவட்ட அரச ஊழியர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்களுக்கு தங்களின் வாக்குகளை வழங்கி எங்களை வெற்றி பெறச் செய்து எங்களின் குரல்களை பாராளுமன்றில் ஒலிக்கச் செய்யுங்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமாகிய பி.சக்திவேல் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலவாக்கலை கிளை காரியாலயத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

மறைந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் ஐயா அவர்கள் முதன் முறையாக மத்திய மாகாணத்திலும் ஊவா மாகாணத்திலும் தமிழ் கல்வி அமைச்சை கேட்டு பெற்றார். அக்காலகட்டத்தில் மலையகத்தில் கல்வியின் வளர்ச்சி மிக மோசமாக காணப்பட்டது அதனை சரிசெய்யவும் மலையக மக்கள் ஏனைய சமூகத்திற்கு மத்தியில் கல்வியில் வளர்ச்சியடைந்து ஏனைய சமூகங்களுக்கு நிகரான சமூகமாக வாழ்வதற்காகவே இந்த கல்வி அமைச்சை மத்திய அரசுடன் பேரம் பேசி பெற்றார்.

இந்த கல்வி அமைச்சினூடாக மலையகத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த எண்ணிணார்.அவர் அன்று எண்ணியவாறு இன்றுவரை மலையகத்தில் கல்வியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்ப்பட்டுள்ளது. தொழிலாளர் வர்க்கமாக இருந்த எமது சமூகம் இன்று பல்வேறு துறைகளில் உயர்ந்திருக்கின்றோம். அன்று அவர் கண்ட கனவு இன்று நனவாகி இருப்பதை காணமுடிகிறது.

மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சினால் பாரிய மாற்றங்கள் தொடர்ந்து மலையகத்தில் ஏற்ப்பட்ட வண்ணமே இருக்கின்றன. 

இதனை பொறுத்துக்கொள்ள முடியாத பெரும்பான்மை அரசியல்வாதிகளும் மலையகத்தின் ஒரு சில அரசியல்வாதிகளுக்கும் ஒரு இலக்கு இருந்தது இந்த மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சை எப்படியாவது இல்லாமல் செய்து விட வேண்டும் என இதுவே இந்;த அமைச்சு கடந்த சில வருடங்களாக நம்மிடமிருந்து இல்லாமல் போக காரணமாக அமைந்தது. 

அதனை எமது சமூகத்திற்கு மீண்டும் தனது பலத்தால் பெற்றுக்கொடுத்தவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான். எனவே எமது புத்திஜீவிகள் நன்கு சிந்திக்க வேண்டும் மலையகத்தின் கல்வி வளர்ச்சிக்கு தொடர்ச்சியாக எண்ணில் அடங்காத சேவைகளை செய்து வரும் மாபெரும் ஸ்தாபனம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பதே உண்மை. 

எனவே இத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் பொதுஜன பெரமுன கட்சியில் மொட்டு சின்னத்தில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்கள் ஐவரையும் வெற்றி பெறச் செய்ய வேண்டிய கடமை உங்களிடம் உள்ளது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -