ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் -
சூரியனை இதுவரை இல்லாத அளவு நெருக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் ( European Space Agency's ) வெளியிட்டுள்ளது.
சூரியனிலிருந்து 7 கோடியே 70 லட்சம் கிலோமீட்டர் தூரத்திலிருந்து இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சூரியனை ஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் நாசா இணைந்து அனுப்பிய சோலார் ஆர்பிட்டர் ( Solar Orbiter ) இந்த புகைப்படங்களை எடுத்துள்ளது.
பூமி சூரியனிலிருந்து 15 கோடியே 2 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கிட்டத்தட்ட இதன் பாதியளவு தூரத்தில் ஆர்பிட்டர் இருக்கும்போது இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
"இந்த அற்புதமான படங்கள் விஞ்ஞானிகள் சூரியனின் வளிமண்டல அடுக்குகளை ஒன்றிணைக்க உதவும், இது பூமிக்கு அருகில் மற்றும் சூரிய குடும்பம் முழுவதும் விண்வெளி வானிலை எவ்வாறு இயக்குகிறது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியமென்று நாசாவின் திட்ட விஞ்ஞானி ஹோலி கில்பேர்ட் ( Holly R. Gilbert ) கூறினார்.