பொதுஜன பெரமுன கட்சியே ஆட்சியமைக்கும் சட்டத்தரணி அலி சப்ரி


எம்.என்.எம்.அப்ராஸ்-

திர்வரும் நாடளுமன்ற தேர்தலில் சுமார் 134 க்கு மேல்
ஆசனத்தை பெற்று பொதுஜன பெரமுன கட்சி ஆட்சியமைக்கும் இதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனவும்
இந்த ஆட்சியில் நீங்களும் பங்காளிகலாகுங்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முஸ்லிம் பிரிவுக்கான தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் சேர்ந்த கல்விமான்கள், ,வர்த்தகர்கள் மற்றும் புத்திஜீவிகள் மாநாடு பொது ஜன பெரமுன வேட்பாளர் தொழிலதிபர் ஜூனியர் றிஸ்லி முஸ்தபா மற்றும் அஸ்பர் உதுமாலெப்பை ஆகியோரின் தலைமையில் கல்முனை நகர மண்டபத்தில் (11) நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில்

அன்று முஸ்லிம்களின் நலனுக்காய் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை அமைத்தார் பின்னர் சிறிது காலத்தின் பெரும்பான்மை மக்களுடன் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்பதற்காகய் நுஆ என்ற கட்சியை உருவாக்கினார். இவரில் மரணித்தின் பின்னர் வந்தவர்களுக்கு சமுதாய நோக்கு இல்லாமல் ஒரு முஸ்லிம் காங்கிரசை பல குறுகளாய் பிரிந்து கட்சிகளையே உருவாக்கினர்.
இது முக்கியமான சந்தர்ப்பமாகும் இங்கு போட்டியிடும் பொதுஜன
பெரமுன கட்சியில் போட்டியிடும் இருவரைவுயும் தேர்தலில் வெற்றியிட்டி பாராளுமன்றம் அனுப்பினால் உங்களுக்கு இது மாபெரும் வெற்றியாகும் நான் இவர்களை
பிரதியமைச்சராக்கி மீண்டும் உங்களிடம்அனுப்புவேன் என்றார்.

இந்நிகழ்வில் அதிதிகளாக முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் மற்றும் பொது ஜன பெரமுன முஸ்லிம் அமைப்பின் தேசிய அமைப்பாளரும் பொது ஜன ஏ.எல்.எம்.உவைஸ் ,
சிராஸ் யூனுஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன் மேலும் இதில் முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் அல் ஹாஜ் மயோன் முஸ்தபா பொது ஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தகர்கள், பொது மக்கள் ஆகியோர் இதன் போது கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -