ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட பொதுத் தேர்தல் வேட்பாளரான முன்னாள் பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கஹவத்த பிரதேசத்தில் ஒருவரை சுட்டுக்கொன்ற விவகார வழக்கின் தீர்ப்பு, இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தினால் இன்று அறிவிக்கப்பட்டது.
தீர்ப்பிற்கு அமைய சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் நிலந்த ஜயகொடி, கஹவத்த பிரதேச சபை முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர ஆகியோருக்கு இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment