ஏ.ஆர்.மன்சூர் பெளண்டேசன் ஏற்பாட்டில் நடைபெற்ற "கதை சொல்வோம்- பரிசு வெல்வோம்" போட்டியின் வெற்றியாளர்கள்


எஸ்.அஷ்ரப்கான்-
.ஆர்.மன்சூர் பெளண்டேசன் ஏற்பாட்டில் "கதை சொல்வோம் - பரிசு வெல்வோம்" போட்டியின் முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்டத்திற்கு உட்பட்ட சிறுவர்கள் கொரோனாவை புத்தகங்களின் துணையோடு கடக்கும் நோக்குடன் " வாசிக்கும் சமூகத்தினை வித்திட, சிறுவர்களிடமிருந்து ஆரம்பிப்போம்" எனும் தொனிப் பொருளில் சர்வதேச சிறுவர் வாசிப்பு தினம் மற்றும் உலக புத்தக தினத்தை சிறப்பிக்கும் முகமாக , இக்காலத்தில் சிறுவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காகவும், அதன் மூலம் உருவாகின்ற அபிமானத்துடன், எதிர்கால வாசிக்கும் சமூகத்தை வித்திடும் அபிலாஷைகளுடன் ஏ.ஆர்.மன்சூர் பெளண்டேசன் சிறுவர்களுக்கான கதை சொல்லுதல் போட்டியை நடாத்தியிருந்தது.
பங்குபற்றும் அனைவருக்கும் சிறப்புச் சான்றிதழும், முதலாம்,இரண்டாம்,மூன்றாம் இடங்களை பெறுபவர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் வழங்குவதுடன், பல ஆறுதல் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பேஸ்புக் ஆதரவின் அடிப்படையில் "லைக்ஸ்" களை பெற்றவர்களின் விபரங்களை போட்டிக் குழு உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசில்களும் கிண்ணங்களும்,அடுத்தடுத்த இடங்களைப் பெற்ற 5 பேருக்கு ஆறுதல் பரிசுகளும் கிண்ணங்களும் வழங்கி கௌரவிப்பதுடன் , பங்கு பற்றிய அனைவருக்கும் சிறப்புச் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
அத்துடன் இப்போட்டியில் வெற்றியாளர்களை " பேஸ்புக் ஆதரவின் அடிப்படையிலும் , நடுவர்களின் தெர்வின் அடிப்படையிலும் " தேர்வு செய்துள்ளது.
பேஸ்புக் ஆதரவின் அடிப்படையில் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள்


1ம் இடம்- மினால் கலீல் வயது-7 சாய்ந்தமருது,
2ம் இடம்-எம்.ஜே.அக்ஸத் அஹமட் வயது-6 மருதமுனை,
3ம் இடம் ரகு ஜனுகேஸ் வயது-6 பாண்டிருப்பு,


ஆறுதல் பரிசு பெறுவோர்கள்
(பேஸ்புக் ஆதரவின் அடிப்படையில் )
 எம்.ஆர்.யர்ரா வயது-4இறக்காமம், எம்.ஏ. அப்தினி அன்ஹத் வயது- 5
சாய்ந்தமருது, எப்.மஹ்தி அஹமட் வயது-7
சாய்ந்தமருது, ஆர்.எப்.சம்றா வயது-4 சாய்ந்தமருது, எம்.ஏ.பிஸாருல் ஹிகாம் வயது-5 கல்முனை,

தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரங்கள்

நடுவர்களின் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள1ம் இடம்
ஏ.எச்.ஆர்.எம்.றஹ்மி
வயது-7 சாய்ந்தமருது, 2ம் இடம்
ஏ.ஆர்.அபிஷா றகாத்
வயது-4 மருதமுனை,3ம் இடம்
ரி.கனிஷ்னவி வயது -6 கல்முனை,
ஆறுதல் பரிசு பெறுவோர் [5பேர்](நடுவர்கள் தேர்வின் அடிப்படையில் )

எஸ்.கவிநயா வயது-6 கல்முனை, எம்.ஏ.ஆதிப் அஹமட் வயது-3
மாளிகைக்காடு, தவசீலன் பிரிதேஸ் வயது-6 கல்முனை,
எம்.எஸ்,செஸரினா வயது-6 இறக்காமம், எம்.ஏ.லுக்மான் அஹமட்
வயது-4 கல்முனை,
இப்போட்டியில் சுமார் 71 போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.இவர்களுக்கான பரிசளிப்பு விழா மிகவிரைவில் நடைபெறவுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -