கனரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி கொண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பொலிஸ் எல்லைக்குட்பட்ட தாளவட்டுவான் சந்தியில் புதன்கிழமை(1) முற்பகல் இடம்பெற்றது.
மருதமுனை பகுதியில் இருந்து நற்பிட்டிமுனை பகுதியை நோக்கி வந்துகொண்டிருந்த கனரக வாகனமும் நற்பிட்டிமுனை பகுதியில் இருந்து கல்முனையை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இவ்விபத்து ஏற்பட்டது.
இதன் போது குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்ததுடன் மோட்டார் சைக்கிளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை போக்குவரத்து பொலிஸார் விபத்த தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.