மட்டக்களப்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து
வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தமிழ்த் தேசியத்தைக்காத்து விலைமதிக்க முடியாத நம் உரிமைகளை வென்றெடுக்க நாம் எல்லோரும் ஒன்றாய் இணைவோம்.
இலங்கையில் வாழ்ந்த ஆதிகால மனிதர்கள் என்று கூறுகின்ற "நாகர்" எனப்படும் மக்கள் பேசிய மொழி நம் தாய்மொழியாகிய தமிழ் மொழி. சிலரது தந்திர செயல்களினால் மதமாற்றம் எனும் போர்வைக்குள் அகப்பட்ட இத் தமிழ் மக்களை மதம் மாற்றியது மட்டுமல்லாமல் வேற்று மொழியையும் அவர்கள் மத்தியில் திணித்தார்கள்.
இருந்தும் நம் தமிழ் மொழியை காக்க சிலர் முழுமூச்சாக செயற்பட்டனர்.
தற்காலத்திலும் நமது அறியாமையினால் தமிழர்களின் தொல்பொருட் சின்னங்கள் சில அழித்தொழிக்கப்பட்டு விட்டன.
தொடர்ந்தும் இத்தகைய செயல்களை மேற்கொண்டு பெரும்பான்மையினரின் மொழியை உயர்வாக கருதுவதற்கு திட்டங்கள் தீட்டப்படுகின்றன.
தமிழ் மக்களின் தொல்பொருட் சின்னங்கள் பரந்து காணப்படும் இலங்கையின் பல இடங்கள் தொல்பொருள் ஆராய்ச்சி நிலையங்களாக
பிரகடனப்படுத்தப்படுகின்றன.இன்னும் இந்த நிலை தொடரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ஆகவே நாம் விழித்தெழ வேண்டும். இவற்றை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் ஓரினமாய் வாழும் தமிழர்களாகிய நாம் வேற்றுமை பேதங்கள் கழைந்து தமிழர்களுக்கே உரித்துடைய பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த நம் மூத்த தலைமுறையினரின் பண்பாட்டு சின்னங்களை பாதுகாப்பதோடு நம் உரிமைகளை காக்கவும் சிந்தித்தித்து வாக்களிக்க வேண்டும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.