ஜே.எப்.காமிலா பேகம்-
ராஜாங்கனை பிரதேச செயலகம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இன்று தபால்மூல வாக்களிப்பு ஆரம்பமாகின்றது.ராஜாங்கனை பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்பட இருந்த தபால் மூல வாக்கெடுப்பு நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இன்று முதல் எதிர்வரும்17ம் திகதி முகல் தபால் மூலமான வாக்களிப்பு காலை 9 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை இடம்பெறவுள்ளது.
குறித்த தினங்களில் வாக்களிக்க தவறிய அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் 20, 21ம் திகதிகளில் சந்தர்ப்பம் அளிக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.