கிழக்கு மாகாண சுகாதாரசேவை முன்னாள் பணிப்பாளர் டாக்டர் லங்கா ஜெயசிங்க காலமானார்

காரைதீவு நிருபர் சகா-

முன்னாள் கிழக்கு மாகாண சுகாதாரசேவைப் பதில் பணிப்பாளரும் அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகருமான பிரபல வைத்தியஅதிகாரி டாக்டர் லங்காதிலக ஜெயசிங்க நேற்று (23)காலமானார்.இறக்கும்போது அவருக்கு வயது 52.

அவரது பூதவுடல் இன்று(24) வெள்ளிக்கிழமை அம்பாறைக்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக சில மணிநேரம் வைக்கப்படவுள்ளது.அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலை தெற்காசியாவில் சிறந்த வைத்தியசாலையென பெயர்பெறக்காரணமாயிருந்தவர் டாக்டர் லங்கா .அவர் முன்னாள் அத்தியட்சகர். அவர் அங்கள்ள வைத்திய அதிகாரிகள் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள்ஊழியர்கள் மற்றும் பொதுமக்களாலும் பிதாமகராக கொண்டாடப்படுபவர் எனலாம்.

வைத்தியதுறையில் நிருவாகமுதுமாணி பூர்த்திசெய்த இவர் திரமானதொரு நிருவாகியாகத் திகழ்ந்தவர். திருமணமாகாதவர்.

கிழக்கு மாகாண பதில் சுகாதாரசேவைப்பணிப்பாளராக இருந்தபோது கடந்த 2018டிசம்பரளவில் திடிரென உயர்குருதியமுக்கம் காரணமாக மூளையிலேற்பட்ட நரம்புவெடிப்பால் நோய்வாய்ப்பட்டு கோமா நிலையில் கொழும்புக்கு விசேட ஹெலியில் கொண்டுசெல்லப்பட்டு பல காலம் தேசியவைத்தியசாலையில் அவசரசிகிச்சைப்பிரிவில் சிகிச்சைபெற்றவர்.


இறுதியாக ஜயவர்த்தனபுர பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தநிலையில் நேற்று காலமானார்.ளைமுடக்கு பாரிசவாதத்தால் சுமார் ஒன்றரைவருடகாலம் வைத்தியசாலைகளில் காலம்கழிந்தது.

கொழும்பைச் சேர்ந்த அவர் இனமத பேதங்களை கடந்து மனிதத்தை மதித்த நம் வழிகாட்டி மிகச்சிறந்த நிர்வாகி எனப்பெயரெடுத்த டாக்டர் லங்கா கல்முனை ஆதாரவைத்திசாலையின் பதில் வைத்தியஅத்தியட்சகராகவும் சிலகாலம் பணியாற்றியிருந்தார்.2013ஏப்ரல் மாதம் பொறுப்பேற்ற அவர் 2013டிசம்பர் 7ஆம் திகதி டாக்டர் இரா.முரளீஸ்வரனிடம் கையளிக்கும்வரை சீரியபணியாற்றியருந்தார்.சிறந்த நிருவாகத்தையும் அபிவிருத்தியையும் செய்தவர்.இவரதுகாலத்தில்தான் வைத்தியசாலையின் முன்னாலிருந்த பழம்பெரும் பாரிய ஆலமரம் வெட்டப்பட்டு வைத்தியசாலை அபிவிருத்திக்கு திறந்துவிடப்பட்டது.அதுவொரு திருப்புமுனையாகவிருந்தது. அதன்பின்னர் இன்றைய வளர்ச்சிக்கு அடிகோலியபெருமை டாக்டர் லங்காவையே சாரும்.

கல்முனை ஆதாரவைத்தியசாலையிலிருந்து விடைபெற்று கடந்தவருடம் வரை அங்குள்ள சித்திவிநாயகர் ஆலயத்தின் திருவிழாப்பூசைகளில் ஒருநாள் பூசையை தானே பொறுப்பெடுத்து உபயகாரராக விளங்கியவர்.கடந்தவருடம் அவர் நோயுற்றிருந்தகாலரணத்தினால் அவருக்காக அந்த ஒருநாள் பூஜையை அம்பாறை பொதுவைத்தியசாலை பாரமெடுத்து செய்துவருகின்றனர்.

கல்முனை ஆதாரவைத்தியசாலை வைத்தியஅத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் வைத்தியசாலை சார்பாக தமது அனுதாப அஞ்சலிகளை தெரிவித்துள்ளார். வைத்தியசாலையிலும் வெண்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.இன்று கல்முனையிலிருந்து ஒருகுழுவினர் அம்பாறை சென்று பூதவுடலுக்கு அஞ்சலிசெலுத்த தயாராகிவருகின்றனர்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் தொடர்பான தகவல் பின்பு அறிவிக்கப்படுமென குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -