பாதையை அமைத்து மலையகத்திதை மாற்ற முடியாது நுவரெலியா மாவட்ட சுயேட்சைக்குழு வேட்பாளர் அனுசியா சந்திரசேகரன் தெரிவிப்பு.


ஹட்டன் கே.சுந்தரலிங்கம் -

த்தனையோ பேரை பாராளுமன்றம் அனுப்பியிருப்பீர்கள்.எத்தனையோ பேர் என்ன செய்தார்கள.; 

பொதுவாக ஒரு பாதையை அமைத்து இதை நாங்கள் தான் அமைத்துக்கொடுத்தோம் எங்களுக்கு வாக்களியுங்கள் என வருவார்கள்.

பாதை மட்டும் நமது பிரச்சினையல்ல இப்படி பாதையை மட்டும் அமைத்துக்கொண்டு இருந்தால் நாம் முன்னேற்றமடைய 100 வருடங்கள் ஆவது ஆகும் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்க 100 வருடங்கள் ஆவது ஆகும். 

லயன் வாழ்க்கையை ஒழிக்க 100 வருடங்கள் ஆவது ஆகும்.இவ்வாறான சலுகைகள் கொடுத்து அல்லது தேர்தல் காலத்தில் சமையல் பாத்திரங்கள் கொடுத்தோம் நாற்காலிகள் கொடுத்தோம் என வருபவர்களை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.

மலையக மக்களுக்காக கோடரி சின்னத்தில் வாக்களிப்பீர்கள் என நினைக்கிறேன்.என. தந்தை மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட்டார் நான் கோடரி சின்னத்தில் போட்டியிடுகிறேன்.களை வந்துவிட்டது ஆயுதம் எடுத்து தான் ஆக வேண்டும்.மலையக மக்கள் முன்னணியை நான் எடுப்பேன் தேர்தலுக்கு பின் மண்வெட்டி வரும்.

எமது இளைஞர்களுடன் இணைந்து மலையக மக்களுக்காக சேவைசெய்ய சட்டத்தரணியாக மிஸ்ஸோ மெடமோ இல்லாமல் உங்கள் அக்காவாக தங்கையாக இருப்பேன் என அவர் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் அனுசியா சந்திரசேகரன்;; தெரிவித்தார்.

லிந்துலை மட்டுகலை தோட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்;ந்து உரையாற்றுகையில் கல்வி அபிவிருத்தியடைந்தால் எம்முடைய மலையக மாற்றம் சரியாக அமையும்.

ஆனால் இந்த கல்வி நிலை மட்டும் மாறினால் போதாது .நாம் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை வேண்டும்.எத்தனையோ பேர் படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கிறார்கள்.

என்னுடைய தந்தை இருந்த காலத்தில் அரசவேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டன.சமூர்த்தியாக இருக்கட்டும், வைத்தியதுறையாக இருக்கட்டும் , பொலிஸ்துறையாக இருக்கட்டும் கிராம அலுவலாகராக இருக்கட்டும் வேலைவாய்ப்புக்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டன..இப்போது நிறைய இளைஞர் யுவதிகள் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கின்றனர்.அவர்களுக்கு வேலை பெற்றுக்கொடுக்க எந்த அரசியல் தலைமைத்துவமும் யோசிப்பதில்லை.

பல்கலைக்கழகம் சென்றும் வேலையில்லை என்று பலர் பல்கலைக்கழகம் செல்லாமலேயே இருந்துள்ளார்கள்.எம்முடைய மலையகம் இப்படி இருக்கக் கூடாது. எம்முடைய மலையகம் மாறவேண்டும்.

இப்படி இளைஞர்கள் அரச வேலையில்லாமல் இருக்கும் பொழுது மலையக மக்கள் முன்னணியின் தலைவர் அவர் இராஜாங்க அமைச்சராக இருந்தபோது கூறியிருந்தார் இந்தியாவில் இருந்து ஆசிரியர்களை வரவழைக்க வேண்டும் என்று.

இங்கே படித்த இளைஞர்களின் நிலை என்னவாவது இதைப்பற்றி சிந்திப்பதற்கு எல்லாம் எந்தத்தலைவரும் தயாராக இல்லை.வாயில் வருவதைக்கூறி ஏதோவொன்றைச்செய்து விட்டு அது மலையக மக்களுக்கு தீர்வு என்றால் தீர்வாகாது.

அன்று என் தந்தை மலையகமக்கள் முன்னணியை அமைத்த போது அவருடன் கஷ்டப்பட்டவர்கள் இருக்கின்றார்கள் அவருடன் சிறைக்கு சென்றவர்கள் இருக்கிறார்கள் அடி உதை வாங்கியவர்கள் இருக்கிறார்கள் அப்படியிருக்கும் போது அன்று மலையக மக்கள் முன்னணியை அமைக்கவிடாது தடுத்தவர்கள் தான் இன்று தலைவராக இருக்கின்றார்கள். 

இருந்து கொண்டு எது எனது கட்சியென கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.ஒரு போதும் மலையக மக்கள் முன்னணியை இப்படி சொந்தம் கொண்டாட விடக்கூடாது.நாம் ஒன்றிணைய வேண்டும் இளைஞர்கள் ஒன்றிணைய வேண்டும்.94ம் ஆண்டு எப்படி என்தந்தையினால் ஒரு மாற்றம் உண்டானதோ அதேபோல் இந்த 2020 இலும் மாற்றம் ஏற்படவேண்டும்.அன்று என்தந்தை மாற்றத்தைக்கொண்டு வரும் போது நிறைய இளைஞர்கள் சிறைக்கு சென்றார்கள்.

அதேபோல் கடந்த வாரம் எங்கள் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.இது இப்போதுள்ள தலைவரின் சூழ்ச்சியாக இருக்கலாம.; தாக்குதல் நடத்தினால் நான் அஞ்சி ஓடிவிடுவேன் என்று அப்படி செய்திருக்கலாம.;இதற்கெல்லாம் அஞ்சி ஓடுபவர் நானில்லை.நான் பயப்படாதது தெரிந்ததும் என்னுடன் ஆதரவாக இருந்த நான்கு இளைஞர்களை சிறைக்கு தள்ளினார்கள்.

நான் அவர்களை பிணையில் எடுப்பதற்காக சென்று அவர்களுடன் கதைத்தேன் ' இரண்டு நாட்கள் பொறுத்துக்கொள்ளுங்கள் நான் உங்களை பிணையில் விடுவிக்கின்றேன்.இரண்டு நாட்கள் பொறுத்துக்கொள்வீரா என்று' அதற்கு அந்தததம்பி சொன்னார் எத்தனை நாட்கள் போனாலும் பரவாயில்லை நாம் வெற்றிபெற்றே ஆகவேண்டும.;

மலையக மக்களுக்காக பொறுத்துக்கொள்கிறேன் என கூறினார். .அன்று என் தந்தைக்காக எப்படி சிறைச்சாலைக்கு செல்ல தயாராக இருந்தார்களோ அதேபோல் இன்றைய இளைஞர்கள் எதற்கு துணிந்து அது சிறையானாலும் பரவாயில்லை எதுவானாலும் பரவாயில்லை என துணிந்து தான் இருக்கிறார்கள்.என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -