எல்லா இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடியது தேசிய காங்கிரஸ் தலைமைத்துவமாகும் - ஏ.எல்.எம்.சலீம்

எம்.என்.எம்.அப்ராஸ்-

தேசிய காங்கிரஸ்
கட்சியில் சார்பாக திகாமட்டுல்ல
மாவட்டத்தில் பாரளுமன்ற தேர்தலில் போட்டியிடும்
மூன்றாம் இலக்க வேட்பாளரும்,
சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர்
ஏ.எல்.எம்.சலீம் அவர்களை ஆதரித்து மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம் சாய்ந்தமருது கடற்கரை வீதி,பெளசி விளையாட்டு மைதானத்தில் நேற்று(17) பிற்பகல் இடம்பெற்றது .

இதன் போது
இங்கு உரையாற்றிய வேட்பாளர் ஏ.எல்.எம்.சலீம்

முஸ்லிங்களின் மரியாதையை இல்லாமல் செய்த அந்த இரண்டு தலைமைத்துவமும் ஒழிக்கப்பட்டு
தேசிய காங்கிரஸ்
தலைமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும். இந்த தலைவர்களை மக்கள் துரத்தியடிக்கும் காலம் வெகுதுரமில்லை மேலும்
எதிர்காலத்தில் சிறந்த தலைமைத்துமானது நாட்டின் எல்லா இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடியது தேசிய காங்கிரஸ் தலைமைத்துவமாகும் .

எமது பிரதேசத்தில் உள்ள சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண கூடிய தலைவர் என்ற ரீதியில் தான் நாங்கள் எமது தேசிய காங்கிரஸ் தலைமையை நாங்கள்
ஏற்றுக்கொண்டு தேசிய காங்கிரஸ் கட்சியில் போட்டியிடுகிறோம் .

அம்பாரை மாவட்ட மக்கள் புத்திசாதூரியமானவர்கள் சிறந்த தலைமைதுவத்தை ஏற்படுத்த திடசங்கட்பம் பூண்டுள்ளனர் அதிலும் குறிப்பாக இவ் மாவட்ட மக்களுக்கு முக்கியமான பங்கு உள்ளது ஏனென்றால் இவ் மாவட்டதில் ஓர் தலைமைத்துவம் உள்ளது இது தான் தேசியத்துக்கும் ஒரு தலைமைத்துவமாக மாறப்போகின்றது.

எதிர் காலத்தில் எமது சுபீட்சம் மற்றும் எமது எதிர்கால சந்ததிக்கு சிறந்த விடயங்களை நாம் விட்டுச்செல்ல வேண்டும் அதற்காய் நாம் தேசிய காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

மேலும் இவ் பொது கூட்டத்திற்க்கு தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ்,
மற்றும் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் ,கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் ,பொது மக்கள் ஆகியோர் இதன் பொது கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -