கந்தளாயில் பால் உற்பத்தியை அதிகரித்து தொழில் வாய்ப்பை ஏற்படுத்த உத்தேசித்துள்ளோம் என பிரதம மந்திரி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.


எப்.முபாரக் -

ந்தளாயில் பால் உற்பத்தியை அதிகரித்து தொழில் வாய்ப்பை ஏற்படுத்த உத்தேசித்துள்ளோம் என பிரதம மந்திரி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
கந்தளாயில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேர்தல் பிரச்சாரம் கூட்டம் இன்று(23) கந்தளாய் குணவர்த்தன மண்டபத்தில் நடைபெற்றது.

கடந்த காலங்களில் அரசாங்கம் இரண்டு துருவங்களாக காணப்பட்டன ஜனாதிபதி பேசுவதை பிரதமர் கேட்பதில்லை,பிரதமர் கதைப்பதை ஜனாதிபதி கேட்பதில்லை தற்போது சுதந்திரமான அரசாங்கம் உள்ளது அதனை மேலும் வேறுண்ட உங்களில் கைகளில் தான் உள்ளது.

முப்பது வருட கால யுத்தத்தினை திருகோணமலை மாவட்டத்தின் சேருவில மாவிலாறு பகுதியில் இருந்தே ஆரம்பித்தோம் என்பதை நான் இந்த நேரத்தில் நினைவுபடுத்துவதில் சந்தோசமடைகின்றேன்.

சீனித் தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பித்து பொருளாதார முன்னேற்றத்தினை ஏற்படுத்துவோம்,மேலும் விவசாயிகளுக்கு மானிய வசதிகளை ஏற்படுத்துவோம்.

நாட்டின் ஜனாதிபதி தேர்ந்தேடுப்பதற்காக நாம் எவ்வாறு ஒற்றுமையாக வாக்களித்தோமே அதேபோன்று அனைவரும் ஒற்றினைந்து பொதுஜன பெரமுனவிற்கு வாக்களித்து புதிய அத்தியாயத்தினை ஏற்படுத்துவோம் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -