2020 பொதுத் தேர்தல் தேசிய காங்கிரஸ் சார்பான திகாமடுள்ள மாவட்ட வேட்பாளரும் சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருமான ஏ.எல்.எம்.சலீம் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் மருதமுனை மக்களுடனான கருத்தரங்கு இன்று இடம்பெற்றது.
சகோதரர் ஜரூன் அவர்களின் ஏற்பாட்டில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் முஹர்ரம் பஸ்மீர் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு நடந்தேறியது.
இதன்போது, தேசிய காங்கிரஸ் வேட்பாளரும் தேசிய காங்கிரஸ் சட்டம் ஒழுங்கு கொள்கை விவகார செயலாளரான சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ், ஓய்வுபெற்ற நிருவாக உத்தியோகத்தரும் சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவுச் சங்க இயக்குனர் சபை தலைவருமான எம்.எம்.உதுமாலெப்பை, தேசிய காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் தேசிய காங்கிரஸின் தேசிய கொள்கைபரப்பு இணைப்பாளருமான நூறுல் ஹுதா உமர், ஓய்வுபெற்ற ஆசிரியர் எஸ்.எம்.பாறுக் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இளைஞர் அமைப்பாளர், தேசிய காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்கள்
ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இக்கருத்தரங்கில் அதிகளவான பொதுமக்களும் தேர்தல் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -