திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான ஆற்றுப்படுத்தல் மற்றும் நல்லிணக்கம் ஊடாக நிலையான தேசிய அமைப்பை நோக்கிய பயணம் எனும் தலைப்பில் செயலமர் வொன்று இன்று(18) திருகோணமலை எகெட் கரித்தாஸ் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில் தமிழ் சிங்கள மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் இருபத்தைந்து பேர் கலந்து கொண்டார்கள்.
இதில் நல்லிணக்கம் மற்றும்ஆற்றுப்படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும்,அதேபோன்று கொரொனா வைரசின் ஊடகவியலாளர்களின் வகிபங்கு போன்ற விடயங்களும் தெளிவுபடுத்தப்பட்டது.
இச் செயலமர்வில் வளவாலர்களாக பாதர் அலன் மற்றும் வைத்தியர் எம்.என்.முனாஸ் ஆகியோர் செயற்பட்டார்கள்.