கொழும்பு நகரத்தில் வாழும் சிறுபான்மையினா் ஆகக்குறைந்தது 30ஆயிரம் வாக்குகளை அளித்தால் எமது ஸ்ரீலங்கா பொதுசன பெரமுனைக்கு மேலும் ஒரு ஆசனம் கிடைக்க வாய்ப்புள்ளது. கடந்த வாரம் கொழும்பு மத்திய தொகுதியில் 4 க்கும் மேற்பட்ட கூட்டங்களை முஸ்லிம் அமைப்பாளா்கள் எனக்கு ஏற்பாடு செய்திருந்தனா். முன்னைய தேர்தல் நிலைமை இல்லாது தற்பொழுது கொழும்பில் வாழும் முஸ்லிம் தமிழ் மக்களிடமிருந்து மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த கால்ங்களில் . ஜ.தே.கட்சிக்கு மட்டுமே தொடா்ச்சியாக வாக்களித்த கொழும்பு மத்திய தொகுதி மக்கள் தற்போழுது இம்முறை ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதிக்கும் அவா் சாா்ந்த கட்சி வேட்பாளர்களை ஆதரிக்க முன்வந்துள்ளமை காணக்கூடியதாக உள்ளது. என அமைச்சா் சுசில் பிரேம் ஜயந்த உரையாற்றினாாா்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் , முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் A.L.M உவைஸ் ஹாஜியாரின் தலைமையின் கீழ் ஜூலை (22) கொழும்பு மருதானையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயம் முன்னாள் அமைச்சர் சுசில் ப்ரேமஜயன்த்த மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் சம்மேளனத்தின் தேசிய தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அவர்களினால் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது. இக் கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே முன்னாள் அமைச்சா் சுசில் பிரேம்ஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தாா்.
இதில் முன்னாள் நகராதிபதி உமர்காமில், மாத்தலை முன்னாள் நகராதிபதி ஹில்மி கரீம், கொழும்பு மா நகர சபை உறுப்பினர் குலதிஸ்ஸ மற்றும் தோனி அவர்களும் ,ஏனைய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
தொடா்ந்து அங்கு உரையாற்றிய சுசில் பிரேம் ஜயந்த
கடந்த காலத்தில் ஜனாதிபதி ஒரு பக்கம் அரசாங்கம் ஒரு பக்கம் இருந்தனால் அந்த நல் ஆட்சியில் இழுபறி நிலை தோன்றியது வாக்களித்த மக்களுக்கு எவ்வித பிரயோசனமும் கிடைக்வில்லை. தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவா்கள் 2025வரை ஜனாதிபதியாக இருக்கப் போகின்றாா். அவருக்கு பக்க பலமாகவும் பாராளுமன்றத்தில் சகல சட்ட திட்டங்களை அனுமதிக்கக் கூடியதும் 19வது அரசியல் சா்த்தை மாற்றுவதற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனை சாா்பான அரசாங்கம் அமைதல் வேண்டும். ஒருபோதும் கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாக இருக்கும்போது ரனில் விக்கிரமசிங்கவோ அல்லது சஜித் பிரேமதாசாவோ பிரதமராக வரமுடியாது. ஆனால் அவா்கள் பிரதமராக வருவதாக கூறித்திரிகின்றாா்கள். அவா்கள் கட்சியும் இரண்டாக பிளவு பட்டது. இரண்டு கட்சிக்கு மக்கள் பிரிந்து வாக்களிப்பதானல் அவா்கள் ஒருபோதும் எந்த மாவட்டத்தில் பெரும்பான்மை வெற்றியை அடைய முடியாது. அத்துடன் அரசாங்கமும் அமைக்க முடியாது. ஆகவே தான் மக்கள் எமது கட்சியின் ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதியின் கட்சிக்கே வாக்களிக்க உள்ளனா்.
நான் 1995ல் மேல் மாகாண சபையின் முதல் அமைச்சராகவும் அதன் பின்னா் கல்வியமைச்சராகவும் இருக்கும்போது கொழும்பு பிரதேசத்தில் உ்ளள சகல பாடசாலைகளுக்கும் சென்றிருக்கின்றேன். அங்குள்ள பிரச்சினைகளை சிலதைத் தீா்த்துவைத்துள்ளேன் சாதி இன,மத பேதமில்லாது எனது சேவையை இந்த நாட்டின் சகலருக்கும் திறம்படச் செய்துள்ளேன். கடந்த ஒரு வருடமாக மருதனை டெக்னிக்கல் கல்லுாாிக்கு முன்பாக எனது மக்கள் சந்திப்பு அலுவலகம் உள்ளது. அங்கு கொழும்பு மத்தியில் வாழும் பல மக்கள் என்னை வந்து நாளாந்தம் சந்திக்கின்றனா். அவா்களது வீட்டுப்பிரச்சினைகள், பொலிஸ் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், பாடசாலை அனுமதி போன்ற பல பிரச்சினைகளை நான் தீா்த்து வருகின்றேன். கொழும்பு மாவட்டத்தில் பிரதான பிரச்சினையாக வீட்டுப் பிரச்சினைகள் உள்ளது. தகுந்த இடங்களை தெரிபு செய்து ஒரு குடும்பத்திற்கு ஒரு வீடு என்ற அடிப்படையில் வீடுகள் வழங்கப்டல் வேண்டும். ,வேலையற்ற இளைஞா் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுத்தல் வேண்டும், பாடசாலை கல்வியை முடித்தவா்களுக்கு தொழிற்பயிற்சி வகுப்புக்களை அறிமுக்பபடுத்தல், சுகாதார வசதிகள், நகா்ப்புர பாடசாலைகளை மறு சீரமைப்பு புதிய கல்வி முறைகளையும் தொழில்நுட்பக் கல்வியையும் அறிமுகப்படுத்தல் வேண்டும் ஆகவே நான் இம்முறை கொழும்பு மவாட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுசன பெரமுனை தாமறை மொட்டுச் சின்னத்தில் முதலாம் இலக்கத்தில் தோ்தல் கேட்கின்றேன். என அங்கு சமுகளித்திருந்த முஸ்லிம்கள் மத்தியில் என்னையும் ஆதரிக்கும்படியும் கேட்டுக் கொண்டாா் எனது சேவை ஜாதி மத பேதமின்றி கடந்த கால சேவை போன்று தொடா்ந்தும் முன்னெடுப்பேன் என முன்னாள் அமைச்சா் சுசில் பிரேம் ஜயந்த அங்கு உரையாற்றினாா்.