கிராமங்களில் அபிவிருத்திகளை செய்து கொள்ள ஆளும் கட்சியோடு இணைந்து கொள்ளுங்கள்


சில்மியா யூசுப்-
ங்களது கிராமங்களில் அபிவிருத்திகளை செய்து கொள்ள ஆளும் கட்சியோடு இணைந்து கொள்ளுங்கள். எதிர்கட்சிகளோடு இணைந்து செல்வதனால் கிராமங்களில் எவ்வித அபிவிருத்திகளும் நடக்கப்போவதில்லை.
என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் சம்மேளனத்தின் தேசிய தலைவர், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எ.எல்.எம் உவைஸ் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் சம்மேளனத்தின் தேசிய தலைவர் , ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எ.எல். எம் உவைஸ் ஆகியோரின் தலைமையில் நடை பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாட்டும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
மேலும் கூறுகையில், திருகோணமலை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் இரண்டு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் எனவே ஆளும் கட்சிகளுக்கு வாக்களித்து திருகோணமலை பிரதேசத்திற்கான அபிவிருத்திகளை பெற்றுக் கொள்ளுங்கள். மேலும் இந்த மாவட்டத்தில் தொழில் வாய்ப்பின்றி இளைஞர்கள் , வாலிபர்கள் இருக்கின்றனர், திருகோணமலை மாவட்டத்தில் சரியானதொரு அபிவிருத்திகள் இல்லை எனவே இம்முறை நடக்க இருக்கும் பொதுத்தேர்தலில் ஆளும் கட்சியிலிருந்து இருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பி சரியான பதவிகளை பெற்றுக் கொடுத்து உங்கள் தேவைகளை ஆளும் கட்சியிலிருந்து நிறைவேற்றிக் கொள்ளுங்கள் என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -