கொரோனா அனர்த்தத்தின் பின்னர் பெற்றோர்கள் சமைக்க ஆயத்தமாகி விட்டனர்-மேலதிக அரசாங்க அதிபர்


பாறுக் ஷிஹான்-
கொரோனா அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கான போஷாக்கான உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு பாண்டிருப்பு கலாச்சார மண்டபத்தில் பிற்பகல் 4 மணியளவில் ஆரம்பமானது.

அம்பாறை கல்முனை டொல்பின் விளையாட்டு கழக சிரேஷ்ட உறுப்பினர்களை கொண்ட டொல்பின் சமூக அமைப்பு கல்முனை வடக்கு சுகாதார பணிமனையோடு இணைந்து பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1 - 5 வயது எல்லைவரை உள்ள குழந்தைகள் அதன் தாய்மார்களுக்கான போஷாக்கான உணவு பொதிகளை சனிக்கிழமை(18) வழங்கி வைத்தனர்.

சுமார் 75 குடும்பங்களுக்கான போஷாக்கு உணவுப்பொதிகள் வழங்கும் குறித்த நிகழ்வானது கொரோனா பாதுகாப்பு மற்றும் தடுப்பு விடயங்களுக்கு ஏற்ப சமூக இடைவெளி பேணப்பட்டு ஆரம்பித்ததுடன் அம்பாறை மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீஷன் கல்முனை வடக்கு சுகாதார பணிமனை அதிகாரி டாக்டர். கணேஸராஜா மற்றும் சுகாதார வெளிக்கள உத்தியோகத்தினர் டொல்பின் விளையாட்டு கழக சிரேஷ்ட உறுப்பினர்கள் உட்பட பயனாளிகள் கலந்து கொண்டனர்.

மேலதிக அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில்

கடலுணவுகளை உண்பதனால் குழந்தைகளின் மூளைவளர்ச்சி விருத்தியடைகின்றது .உலகில் அதிக விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பாளர்களை கொண்ட நாடு இஸ்ரேல் ஆகும்.அங்கு தாய்மார்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி க்டலுணவுகளை அவர்கள் உட்கொள்வதாக அறிய முடிகின்றது.எனவே குழந்தைகளின் மூளைவளர்ச்சிக்கு அயடின் முக்கியமாகும்.எம்மவர்கள் விளம்பரத்திற்காக வாழப்போனால் வாழ்க்கை செலவு போதாது.எனவே இன்று தவிட்டரிசி எமது பாவனையில் இல்லாமல் சென்றுள்ளது.சில தானிய பயன்பாடுகள் எம்மை விட்டு சென்று விட்டது.பிள்ளைகளுக்காக கொரோனா அனர்த்தத்தின் பின்னர் பெற்றோர்கள் சமைக்க ஆயத்தமாகி விட்டனர்.கடந்த காலங்களில் பேக்கரி மற்றும் கடைகளை நம்பியவர்களை கொரோனா வைரஸ் மாற்றி பிள்ளைகளுக்கு சுத்தமான உணவுகளை வழங்குபவர்களாக அவர்களை மாற்றிவிட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -