பிள்ளையானின் கட்சி மட்டக்களப்பில் மூன்று ஆசனங்களை பெறும் -ஜெயம்


எஸ்.எம்.எம்.முர்ஷித்-

ட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மூன்று ஆசனங்களை பெறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஏனெனில் மக்கள் எங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்;சியின் பிரதித் தலைவருமான நாகலிங்கம் திரவியம் (ஜெயம்) தெரிவித்தார்.

பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்;சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை ஆதரித்து வாழைச்சேனை மயிலங்கரச்சையில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

மட்டக்களப்பு மக்களை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்;சியால் தான் காப்பற்ற முடியும் என்று மக்கள் நம்பியுள்ளனர். இதன் காரணமாக இம்முறை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்;சி மூன்று ஆசனங்களை பெறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

நாங்கள் மாகாண சபையில் இருந்து செய்த சேவைகளை சுமார் பத்து வருடங்கள் பாராளுமன்றத்தில் இருந்தவர்கள் செய்யவில்லை. தங்களது கிராமத்தில் காணப்படும் குறைபாடுகளை கூட நிறைவேற்ற முடியாமல் காணப்படுகின்றார்கள்.

ஜெயானந்தமூர்த்தி தன்னையும், தனது குடும்பத்தையும் மாத்திரம் காப்பாற்ற வேண்டும் என்று நாட்டை விட்டு ஓடினார். ஆனால் மக்களுக்கு அவரால் எதுவும் செய்யவில்லை. தற்போது வந்து மக்களின் காலடிக்கு செல்கின்றார்கள். ஆனால் நாங்கள் மக்களுக்காகவே மக்களோடு நின்று கொண்டிருக்கின்றோம்.

கடந்த முறை நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் தங்கள் கட்;சிக்கு ஆசனங்களை வழங்கி பிச்சை போட்டுள்ளதாக சிலர் கூறுகின்றனர். அப்படியானவர்கள் தங்களுக்கு ஆட்சி அமைக்கக் கூடிய பலம் இருந்தும் இயலாமை காரணமாக மாற்று சமூகத்தினரிடம் ஆட்சி அமைக்கக் கூடிய வழிவகையினை கையளித்து சென்றனர்

தமது கட்;சியானது மட்டக்களப்பில் நான்கு ஆசனங்களையும் அம்பாறையில் மூன்று ஆசனங்களையும் எல்லாமாக ஏழு ஆசனங்களை பெற்று கிழக்கு மாகாண சபையில் சிவநேசதுரை சந்திரகாந்தனை முதலமைச்சராக கொண்டு ஆட்;சி அமைத்தோம். ஆனால் இதற்கு யாரும் பிச்சை போடவில்லை.

அவரது ஆட்;சிக்காலத்திலே தான் பின்தங்கிய கிராமங்கள் தோறும் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்திருந்தார். இதனை எவரும் மறுப்பதற்கில்லை. சகோதர இனத்தை சார்ந்த அரசியல் பிரமுகர்கள் தேர்தலில் வெற்றி பெற்றதும் தமது சமூகம் சார்ந்த நலன் கருதி தேசிய கட்;சியுடன் இணைந்து செயற்படுவார்கள். ஆனால் நாம் வாக்களிக்கும் நபர்கள் எமது சமூகம் சார்ந்த விடயத்தினை கவனத்தில் கொள்ளாது தங்களை வளப்படுத்தும் தயார்படுத்தும் நடவடிக்கையிலேயே அதிகம் ஈடுபடுவார்கள்.

குறிப்பாக ஓட்டமாவடி, ஏறாவூர், காத்தான்குடி பிரதேசம் எந்த ஆட்சி வந்தாலும் அபிவிருத்தி செய்யப்படுகின்றனர். அங்குள்ளவர்கள் தமது சமூகத்தின் நன்மை கருதி அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றார்கள். ஆனால் எமது மக்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்பும் பிரதிநிதிகள் தங்களை தயார்படுத்தி செல்வதற்கு மாத்திரமே நடக்கும். ஆனால் எமது சமூகத்திற்கு எதுவும் செய்யவில்லை.

சமூகத்திற்கு அவர்கள் எதுவும் செய்வதில்லை. இதேவேளை செயற்படாமல் இருந்த கிழக்கு மாகாண சபையை பொறுப்பெடுத்து திறம்பட சேவையாற்றிய சந்திரகாந்தன் நான்கரை வருடம் கடந்தும் சிறைச்சாலையில் உள்ளார். அவர் நாடாளுமன்றம் சென்றால் திறம்பட மக்கள் சேவையை முன்னெடுப்பார் என்பதில் சந்தேகமில்லை. அந்த ஆளுமை, ஆற்றல் அவரிடமே உள்ளது என்றார்.

மயிலங்கரச்சை மங்களராமைய விகாராதிபதி மகிந்தா லங்கார தேரரினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள், கொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -