குச்செவெளியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தால் நாடு புதியதொரு அரசியல் கலாச்சாரத்தை நோக்கி நகர்வதை நீங்கள் நன்கு அறிவீர்கள். இந்த புதிய அரசியல் கலாச்சாரத்தில் சிறுபான்மை சமூகங்களின் இருப்புக்கு பாரிய அச்சுறுத்தல் காணப்படுவதை இலகுவாக ஊகிக்கலாம். உதாராணமாக சிறுபான்மையினர் பெரும்பான்மையாக வாழும் கிழக்குமாகாணத்திற்கு அமைக்கப்பட்ட தொல்பொருள் செயலணியில் சிறுபான்மை பிரதிநிதிகள் யாரையும் உள்வாங்காதது எதிர்காலத்தில் இப்போதுள்ள அரசு ஆட்சி அமைக்கும் சந்தர்பத்தில் அந்த அரசில் சிறுபான்மையினர் எவ்வாறு நடத்தப்படுவார்கள் என்பதற்கு சிறந்த உதாரணமாகும்.
ஆகவே சிறுபான்மையினரான நாம் எதிர்கொள்ளவுள்ள இந்த சவாலை எதிர்கொண்டு எமது இருப்பை உறுதி செய்துகொள்ள பாராளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் சரியான சந்தர்பத்தில் குரல் கொடுக்க கூடிய ஒரு பிரதிநிதி எமக்கு அவசியம்
அதுபோன்று அரச,அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் எமது மாவட்ட அபிவிருத்தி, வேலைவாய்ப்பு, மக்களின் வாழ்வாதார விருத்தி போன்றவற்றையும் நிவர்த்தி செய்து எமது மாவட்டத்தையும் ஏனைய மாவட்டங்களைப்போன்று அபிவிருத்தி செய்ய வேண்டும்
எனவே, இப்போதுள்ள சூழ்நிலையில் தனியே சமூக குரலாகவோ, தனியே அபிவிருத்தியாகவோ இல்லாமல் அபிவிருத்தியோடும், சமூக குரலோடும் சமாந்தரமாக பயணிக்கும் ஒரு பிரதிநிதியே எமக்கு அவசியம்.எனது நான்கரை வருட பாராளுமன்ற காலத்தை எடுத்துநோக்கினால் எமது சிறுபான்மை சமூகத்துக்கு அநீதி இழைக்கப்படும் அனைத்து சந்தர்பங்களிலும் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் எமது மக்கள் சார்பாக எனது குரல் ஒலித்துள்ளதை அறிவீர்கள்.
அபிவிருத்தியை பொறுத்தவரை எனது அபிவிருத்தி செயற்பாடுகள் இன, மத, பிரதேச வேறுபாடின்றி மாவட்டம் முழுவதும் இடம்பெற்றுள்ளது. எனது அபிவிருத்தி பணிகள் வெருகல் முதல் கோமரங்கடவல வரை அனைத்து பகுதிகளிலும் நடைபெற்றுள்ளது.
இந்த குறுகிய காலத்தில்
· 24 பாடசாலை கட்டிடங்கள் என்னால் வழங்கப்பட்டுள்ளன.
· கிழக்கு மாகாணத்தில் பல வருடகாலமாக காணப்பட்ட தொண்டராசிரியர் பிரச்சினைக்கு என்னால் தீர்வை பெற்றுக்கொடுக்க முடிந்தது.
· திருகோணமலையில் முதலாவது முஸ்லிம் பெண்கள் தேசிய பாடசாலையாக கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம் என்னால் தரமுயர்த்தப்பட்டது.
· அதுபோல் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனத்தில் எவ்வித அரசியல் நோக்கமும் இல்லாமல் தகுதி வாய்ந்த எமது மாவட்ட வீரர்கள் பலரை இணைத்துக்கொள்ள முடிந்தது.
· மூவின மக்களுக்குமான வீட்டு திட்டங்கள் மாவட்டம் முழுவதும் வழங்கப்பட்டுள்ளன.
· பல வீதிகள் புதிதாக அமைத்தும் புனரமைப்பும் செய்யப்பட்டுள்ளதோடு பல உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இதுபோன்று இந்த குறுகிய காலத்தில் அனைத்து துறைகளிலும் என்னால் மக்களுக்கு எதுவித ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லாமல் பணியாற்ற முடிந்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.
ஆகவே இப்போது நாட்டில் உள்ள அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப மீண்டும் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படின் இதுபோன்று என்னால் அபிவிருத்தியுடன் இணைந்த சமூக குரலாக மூவின மக்களையும் இணைத்துக்கொண்டு முன்னோக்கி பயணிக்க முடியும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.